அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!

உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனமான S&P Global Ratings வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிப்பில் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் & SEZ லிமிடெட் ஆகிய 2 நிறுவனத்தின் மதிப்பீட்டை Stable என்ற நிலையில் இருந்து Negative ஆக மாற்றியுள்ளது.

ஏற்கனவே Citigroup, கிரெடிட் சூசி நிறுவனங்கள் மார்ஜின் கடன்களுக்குக் கௌதம் அதானி-யின் குழும நிறுவனங்களின் பத்திரங்களைப் பிணையமாக ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதில் முக்கியமாகக் கிரெடிட் சுசூசி ஏஜி நிறுவனம் அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதான் எலக்ட்ரிசிட்டி மும்பை ஆகிய நிறுவனம் வெளியிட்ட பத்திரங்களுக்கு zero-lending value மதிப்பீட்டை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த 3ல் 2 நிறுவனங்களுக்கான ரேட்டிங்-ஐ S&P Global Ratings அதிரடியாகக் குறைத்துள்ளது.

கௌதம் அதானி

கௌதம் அதானி

கௌதம் அதானி-யின் அதானி குழுமம் மீதான பங்குக் கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து இக்குழுமத்தின் முக்கியமான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், பிப்ரவரி 7, 2023 அன்று வர்த்தகம் திறக்கப்படுவதற்கு முன்னதாக, Dow Jones Sustainability குறியீட்டில் இருந்து நீக்கப்படும் என்று S&P Dow Jones Indices நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

S&P குளோபல் ரேட்டிங்ஸ்

S&P குளோபல் ரேட்டிங்ஸ்

இதைத் தொடர்ந்து S&P Global Ratings வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிப்பில் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் & SEZ லிமிடெட் ஆகிய 2 நிறுவனத்தின் மதிப்பீட்டை Stable என்ற நிலையில் இருந்து Negative ஆக மாற்றியுள்ளது மூலம் அடுத்தடுத்து பல ரேட்டிங் அமைப்புகள் மதிப்பீட்டைக் குறைக்கும் முடிவை எடுக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

Negative மதிப்பீடு

Negative மதிப்பீடு

அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி எலெக்ட்ரிசிட்டி மும்பை மீதான எதிர்மறையான மதிப்பீடு இக்குழுமம் கடன் வாங்குவதில் இருக்கும் பிரச்சனையை வெளிப்படையாகக் காட்டுகிறது. மேலும் இந்த Negative மதிப்பீடு அதானி குழுமத்தின் கடன் பெறும் மதிப்பீட்டை கட்டாயம் வெளிநாட்டு சந்தை மற்றும் நிதி நிறுவனங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பங்குதாரர்கள் மட்டத்தில் குற்றச்சாட்டுகள்

பங்குதாரர்கள் மட்டத்தில் குற்றச்சாட்டுகள்

அதானி குழுமத்திற்குக் குறிப்பிடத்தக்க நிர்வாகச் சிக்கல்கள் இருப்பதாகக் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டு உள்ள வேளையில், இதில் இருக்கும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பங்குதாரர்கள் மட்டத்தில் இருக்கும் காரணத்தால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மற்றும் பத்திரங்களின் விலையில் தடாலடி வீழ்ச்சி பதிவாகியுள்ளது என S&P Global Ratings தெரிவித்துள்ளது.

குறுகிய காலப் பணப்புழக்கம்

குறுகிய காலப் பணப்புழக்கம்

S&P Global Ratings ஏஜென்சியின் Negative மதிப்பீடு பெற்றுள்ள , அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் & SEZ லிமிடெட் நிறுவனங்களின் வணிக அடிப்படைகள் சரியாக இருப்பதால், குறுகிய காலப் பணப்புழக்கம் போதுமானதாக இருக்கும்.

கடன் முதிர்வுகள்

கடன் முதிர்வுகள்

மேலும் அடுத்த 12 மாதங்களில் கடன் முதிர்வுகளை நிர்வகிக்கக் கூடிய அளவிலான நிதி ஆதாரங்கள் இருப்பதால் இந்த Negative மதிப்பீட்டை உறுதி செய்துள்ளது S&P Global Ratings ஏஜென்சி.

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள்

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள்

இதேவேளையில் வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் மோசமான சரிவுக்குப் பின்பு அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் வர்த்தகம் முடியும் போது சரிவில் இருந்து மொத்தமாக மீண்டு 1.25 சதவீதம் உயர்வுடன் உள்ளது. இது முதலீட்டாளர்களுக்குப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

 முக்கிய நிறுவனங்கள் மீண்டது

முக்கிய நிறுவனங்கள் மீண்டது

இதேபோல் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அதானி போர்ட்ஸ் 7.98 சதவீதம் உயர்ந்தும், ஏசிசி லிமிடெட் பங்குகள் 4.39 சதவீதம் உயர்ந்தும், அம்புஜா சிமெண்ட்ஸ் 6.03 சதவீதம் உயர்ந்தும் உள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் காலையில் 30 சதவீதம் வரையில் சரிந்து குறிப்பிடத்தக்கது.

அதானி குழும பங்குகள்

அதானி குழும பங்குகள்

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, வர்த்தக முடிவில் அதானி குழுமத்தின் 10 பங்குகளின் நிலவரம்

அதானி எண்டர்பிரைசஸ் - 1.25 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 7.98 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 5.00 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 10.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 10.00 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 4.99 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 4.39 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 6.03 சதவீதம் உயர்வு
NDTV - 4.98 சதவீதம் சரிவு

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+