இந்தியாவின் உற்பத்தி குறித்தான எஸ் & பி குளோபல் பிஎம்ஐ தரவானது வெளியாகியுள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தில் 57.8 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த நவம்பர் மாதத்தில் 55.7 ஆக இருந்தது.
சர்வதேச நாடுகள் பலவும் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், தொழிற்துறையில் உற்பத்தியானது பெரியளவில் சரிவினைக் கண்டுள்ளது.
எனினும் இந்தியாவில் தாக்கம் இருந்தாலும் பெரியளவில் இல்லை என்றே கூறலாம். மற்ற நாடுகளை காட்டிலும் பொருளாதாரம் என்பது சற்றே வளர்ச்சி பாதையில் உள்ளது.
தேவையானது அதிகரிக்கலாம்
தொடர்ந்து இந்தியாவில் தேவையானது அதிகரித்து இருந்து வரும் நிலையில், பல்வேறு துறைகளிலும் தேவையானது அதிகரித்துள்ளது. இது உற்பத்தியினை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாகவே கணிசமான வளர்ச்சியினை தொழிற்துறையானது கண்டு வருகின்றது. இது தொடர்ந்து தற்போதும் வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ள நிலையில், இன்னும் தேவையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஊக்குவிப்பு நடவடிக்கை
பணியமர்த்தல் நடவடிக்கையும் கூட சில துறைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து மத்திய அரசு தொழிற்துறை வளர்ச்சி விகிதங்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது குறிப்பாக பிஎம்ஐ மற்றும் ஆத்மா நிர்பார் திட்டம் என பல திட்டங்கள் உற்பத்தியினை அதிகரிக்க வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் உற்பத்தி துறையில் முதலீடுகளானது கணிசமாக அதிகரித்துள்ளது.
வலுவான உற்பத்தி விகிதம்
தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இந்தியாவில் உற்பத்தி விகிதமானது வலுவான வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இருப்பும் போதிய அளவில் காணப்படுகின்றது. எப்படியிருப்பினும் சில மூலதன பொருட்கள் விலையானது அதிகரித்துள்ள நிலையில், இது உற்பத்தி விலையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது உற்பத்தி பொருட்கள் மீதான விலையை அதிகரிக்க தூண்டியுள்ளது.
பாதிக்கப்படுமா?
நடப்பு ஆண்டிலும் உற்பத்தி பாதிக்கப்படலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. ஆனால் உற்பத்தியாளர்கள் உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். உள்நாட்டில். தேவை அதிகரித்துள்ளதோடு, வெளிநாட்டு ஆர்டர்களும் கணிசமான அதிகரிக்க தொடங்கியுள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் அழுத்தம் என்பது சற்று இருந்தாலும், உற்பத்தியானது வலுவான வளர்ச்சி பாதையில் உள்ளதையே இந்த தரவின் மூலம் அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications