மும்பை: எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் வளர்ந்து வரும் நாடுகளின் வங்கிகள், 2021ல் சந்திக்க கூடிய பிரச்சனை குறித்து எச்சரித்துள்ளது.
இது குறித்த அறிக்கையில், நடப்பு ஆண்டில் வங்கி அமைப்புகள் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய பிரச்சனைகள் குறித்து வளர்ந்து வரும் நாடுகளை எச்சரித்துள்ளது.
இது இன்று உலகின் பல நாடுகளும் கொரோனாவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எந்தெந்த நாடுகளில் ஆய்வு
இது குறித்தான ஆய்வினை எஸ்& பி 15 பெரிய வங்கி அமைப்புகளுடன் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் அர்ஜெண்டினா, பிரேசில், இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
என்னென்ன பிரச்சனை
அதோடு இந்த ரேட்டிங்ஸ் நிறுவனம் மூன்று முக்கிய பிரச்சனைகளை அடையாளம் கண்டு எச்சரித்துள்ளது. அதில் முதலாவது சொத்து தர குறிகாட்டிகள் சரிவு, நிலையற்ற அரசியல் சூழல் மற்றும் உள்நாட்டு கொள்கை நிச்சயமற்ற தன்மை, மூலதனம் பாதிப்பு ஆகும்.
கொரோனா பற்றிய அச்சம்
எனினும் மத்திய வங்கிகள் பொருளாதார மீட்சி மற்றும் சாதகமான பொருளாதார நிலைக்காக வட்டி விகிதங்களை அப்படியே வைத்திருக்கலாம். எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றிய அச்சம் நிலவி வருகின்றது. இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு மேற்கொண்டு அச்சங்களாகவே இருந்து வருகின்றது. இது பொருளாதார வளர்ச்சியினை தாமதப்படுத்தலாம். இது வங்கிகளுக்கு பிரச்சனையாகவே அமையும் என்றும் கூறியுள்ளது.
கொரோனாவின் பரிணாமம்
இது வங்கி அமைப்புகளில் மேற்கொண்டு பிரச்சனைகளை உருவாக்கலாம் என்றும் இந்த மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளது. எனினும் கொரோனாவின் பரிணாமம் மாறிக் கொண்டேயுள்ளது. இதன் விளைவுகள் பொருளாதாரத்தில் இருக்கலாம் என்றும் எஸ்&பி நம்புகிறது.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்: ஏடிஎம் பரிவர்த்தனை முதல் QR ஸ்கேனர் வரை புதிய கட்டுப்பாடுகள்!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications