அமெரிக்க AI நிறுவனமான அன்த்ரோபிக் தனது கிளாட் சாட்பாட் (Claude chatbot) உதவியுடன் இயங்கும் புதிய AI "ப்ளகின்கள்" வெளியிட்டுள்ளது. ஏஐ மூலம் ஏற்கனவே பல சேவைகள் செய்யப்படும் வேளையில், இந்த ப்ளகின் பெரியதாக என்ன செய்துவிட போகிறது..? என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது இந்த விஷயம்.
இந்த ப்ளகின்கள் அலுவலக வேலைகளை தானாகவும், ஆரம்பமும் முதல் முடிவது வரையில் முழுமையாக செய்யும் திறன் கொண்டது. இந்த ப்ளகின்கள் தொழில்நுட்பம் அல்லாத (Non Technical) பணிகளை செய்யக்கூடியவை என்பதால் உலகளவில் இருக்கும் SAAS நிறுவனங்களுக்கு இது பெரிய சவலாக மாறியுள்ளது. கிளாட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சாஃப்ட்வேர் சேவை, சட்ட தொழில்நுட்பம், நிதி சேவை நிறுவனங்களின் பங்குகளை கடுமையாக சரியச் செய்தது.

ரூ.25 லட்சம் கோடி இழப்பு
ஒரே நாளில் சாப்ட்வேர் நிறுவனங்களின் சந்தை மதிப்பை சுமார் 285 பில்லியன் டாலர் இழந்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25 லட்சம் கோடி - (25,77,825 கோடி ரூபாய்). இதை பங்குச்சந்தை வட்டாரத்தில் "SaaSpocalypse" என்று அழைக்கின்றன, அதாவது சாஃப்ட்வேர்-ஆஸ்-எ-சர்வீஸ் (SaaS) நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடியை தான் SaaSpocalypse.
தாம்சன் ரெயூட்டர்ஸ் பங்குகள் 15 சதவீதமும், Relx பங்குகள் 14 சதவீதம், லீகல்ஜூம் 20 சதவீதமும். இதேபோல் அமெரிக்காவில் இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்களின் ஏடிஆர்களும் 5 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது.

கிளாட் கோவொர்க் சிறப்பு என்ன..?
அன்த்ரோபிக்கின் புதிய தயாரிப்பு "கிளாட் கோவொர்க்" (Claude Cowork) என்பது சாதாரண அலுவலக ஊழியர்களுக்கான AI உதவியாளராகும். இது அலுவலக ஆவணங்களை படித்து, ஆவணங்களை ஒழுங்குபடுத்தி, அறிக்கைகள் தயாரித்து, பணிகளை படிப்படியாக செய்யும் திறன் கொண்டது.
மேலும் இதை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களுடைய அனுமதியுடன் அலுவலக ஆவணங்கள மற்றும் கருவிகளை பயன்படுத்தி கட்டுப்பாடில் வேலை செய்யும் திறன் கொண்டது. இது மனித ஊழியரைப் போலவே செயல்படும் ஆனால் வேகமாகவும், இடைவிடாமலும் இயங்கும் என்பதால் மற்ற ஏஐ சேவையில் இருக்கும் நம்பிக்கை தன்மையின்மை இதில் குறைவு என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது அன்த்ரோபிக் வெளியிட்டுள்ள 11 ஓப்பன்-சோர்ஸ் ப்ளகின்கள் ஒரு நிறுவனத்தில் பல பணிகளை ஆட்டோமேட் செய்ய கூடிய திறன் கொண்டதாக உள்ளது. இந்த 11 ஓப்பன்-சோர்ஸ் ப்ளகின்கள் சேல்ஸ், மார்க்கெட்டிங், பைனான்ஸ், வாடிக்கையாளர் சேவை, டேட்டா அனலிஸ்ட், அறிவியல் ஆராய்ச்சி போன்ற பணிகளுக்கு பர்சனலைஸ்டு முறையில் மேம்படுத்திக்கொள்ள உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த 11 ப்ளகின்களும் கிளாட் ஏஐ பயன்படுத்தும், இதன் வாயிலாக வெறும் ஏஐ உதவியாளராக இருந்த கிளாட் தற்போது வர்த்தக துறையில் workflows-ஐ கைப்பற்றும் அளவுக்கு முன்னேறியுள்ளது.
இதனால் டெக் துறை வேலைவாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணம்
லீகல் ப்ளகின் (Legal Plugin) ஒப்பந்தங்களை ஆய்வு செய்யும், NDAகளை வரிசைப்படுத்தும், நிறுவனங்களுக்கு மத்தியிலான இணக்கத்தை சரிபார்க்கும், சட்ட சுருக்கங்களை தயாரிக்கும். ஆனால் சட்ட ஆலோசனை அளிக்காது, வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அச்சம் - சரிவு - இழப்பு
லீகல் ப்ளகின் (Legal Plugin) சிறப்பு சட்ட AI இல்லை என்றாலும் இது முதலீட்டு சந்தையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த எளிய பிராம்ட் மூலம் லீகல் சாஃப்ட்வேர் செய்யும் வேலைகளின் பெரும்பகுதியை மாற்ற முடியுமானால், பல நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளன என்று முதலீட்டாளர்கள் அஞ்சினர். இது சாஃப்ட்வேர் சந்தையில் பெரும் விற்பனைக்கு வழிவகுத்தது.
ஏஐ நிறுவனங்கள் ஆதிக்கம்..!
அன்த்ரோபிக் இனி AI மாடலை மட்டும் விற்காமல், ஒரு நிறுவனத்திற்கான முழு workflow-ஐ கட்டுப்பாட்டையும் கவனிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. முன்பு தாம்சன் ராய்ட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் கிளாட்டை தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தின. இப்போது கிளாட் தானே முழு வேலையை செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
இது இடைநிலை சாஃப்ட்வேர் நிறுவனங்களின் () வணிகத்தை ஆட்டிவைத்துள்ளது. இதுவே சந்தை சரிவுக்கு முக்கியமான காரணமாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications