பிளிப்கார்ட் சச்சின் பன்சால்-க்கு அடித்த ஜாக்பாட்.. செபி கொடுத்த உத்தரவு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடங்கிய சச்சின் பன்சால், அந்நிறுவனத்திலிருந்து விலகி தொடங்கிய புதிய நிறுவனம் தான் நவீன டெக்னாலஜி.

நிதி சேவை நிறுவனமான நவீன டெக்னாலஜி கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவீன் டெக்னாலஜி நிறுவனத்திற்கு ஐபிஓ வெளியிட்ட செபி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அந்நிறுவனத்திற்கு கிடைத்த ஜாக்பாட் என கருதப்படுகிறது.

ரெடியா இருங்க.. பிளிப்கார்ட், அமேசான் கொடுக்கப்போகும் ஜாக்பாட்..! ரெடியா இருங்க.. பிளிப்கார்ட், அமேசான் கொடுக்கப்போகும் ஜாக்பாட்..!

நவீன் டெக்னாலஜி ஐபிஓ

நவீன் டெக்னாலஜி ஐபிஓ

ப்ளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சாலின் முதலீடுகளை கொண்ட நவி டெக்னாலஜிஸின் ஐபிஓவுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், புதிய பங்கு வெளியீட்டில், நவி டெக்னாலஜி நிறுவனம் ரூ.3,350 கோடி வரை திரட்ட இலக்கு வைத்துள்ளது.

செபி ஒப்புதல்

செபி ஒப்புதல்

முன்னணி இணையதளத்தில் வெளியான தகவலின்படி நவி டெக்னாலஜி நிறுவனத்திற்கு செபி ஐபிஓ ஒப்புதல் குறித்து செப்டம்பர் 5 அன்று கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செபி கட்டுப்பாளர்

செபி கட்டுப்பாளர்

செபியின் கடிதத்தை அடுத்து நவி டெக்னாலஜி நிறுவனம் ஐபிஓவை வெளியிடுவதற்கான ஆரம்பகட்ட பணியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஐபிஓ அனுமதிய பெற இந்நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் செபி கட்டுப்பாட்டாளரிடம் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை தாக்கல் செய்தது.

துணை நிறுவனங்களில் முதலீடு

துணை நிறுவனங்களில் முதலீடு

இந்த நிலையில் ஐபிஓ மூலம் கிடைக்கும் வருமானத்தை துணை நிறுவனங்களில் முதலீடு செய்ய பயன்படுத்தப்படும் என்றும், குறிப்பாக நவி ஃபின்சர்வ் பிரைவேட் லிமிடெட் (NFPL) மற்றும் Navi General Insurance Ltd (NGIL) ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் என நவி டெக்னாலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஆரம்பம்

2018ஆம் ஆண்டு ஆரம்பம்

பிளிப்கார்ட்டில் இருந்து வெளியேறிய பிறகு, பன்சால் அங்கித் அகர்வாலுடன் இணைந்து 2018ஆம் ஆண்டு நவி டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தொடங்கினார்.இந்த நான்கு ஆண்டுகளில் இந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

 தனி நபர் கடன்கள்

தனி நபர் கடன்கள்

நவி டெக்னாலஜிஸ் என்பது தொழில்நுட்பம் சார்ந்த நிதி தயாரிப்புகள் மற்றும் நிதி சேவை நிறுவனமாகும். இது 'நவி' பிராண்டின் கீழ் தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள், பொது காப்பீடு மற்றும் பரஸ்பர நிதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சலுகைகளை விரிவுபடுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sachin Bansal-led Navi Technologies gets SEBI nod for Rs 3,350 crore public offer

Markets regulator Sebi has given its approval for the initial public offering of Navi Technologies, which has investments from Flipkart co-founder Sachin Bansal. Through the Initial Public Offering (IPO), which will be fresh issue of shares, the company aims to raise up to Rs 3,350 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X