ஆன்-டாப் முறையில் யுனிவர்சல் வங்கிகள் அமைக்க விண்ணப்பம் அளித்த நான்கு அமைப்புகளையும், சிறு நிதி வங்கிகள் அமைக்க விண்ணப்பம் அளித்த இரண்டு அமைப்புகளையும் விதிமுறைகளுக்குப் பொருந்தாத காரணத்தால் இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை 6 நிறுவனங்களின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆன்-டாப் லைசென்சிங் என்பது ரிசர்வ் வங்கியின் வங்கி உரிமத்தைப் பெறுவதற்கான கதவுகளை ஆண்டு முழுவதும் திறந்திருக்கும்.

முன்னதாக, ஆர்பிஐ வங்கி உரிமங்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை அழைத்தது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பித்துத் தணிக்கை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
யூனிவெர்சல் வங்கியை அமைக்க உரிமம் பெற நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்
1. சச்சின் பன்சால் தலைமையிலான சைதன்யா இந்தியா ஃபின் கிரெடிட் பிரைவேட் லிமிடெட்
2. UAE எக்ஸ்சேஞ்ச் அண்ட் பைனாசியல் சர்விச்ஸ் லிமிடெட்
3. ரெப்கோ வங்கி
4. பங்கஜ் வைஷ் மற்றும் பலர்.
சிறு நிதி வங்கிகள் அமைக்க 'ஆன் டேப பிரிவின் கீழ் உரிமம் பெற நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்
1. VSoft டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்
2. காலிகட் சிட்டி சர்வீஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட்
என மொத்தம் 6 வங்கிகளின் விண்ணப்பத்தை ரத்து செய்துள்ளது.
யுனிவர்சல் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகளுக்கு 'ஆன் டேப்' உரிமம் வழங்குவதற்கான வங்கியை அமைக்க ரிசர்வ் வங்கி சுமார் 11 பேரிடம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இதில் 6 விண்ணப்பங்கள் முதல் கட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டு உள்ள நிலையில், மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் கீழ் வகுக்கப்பட்ட நடைமுறையின்படி ஆறு விண்ணப்பங்களின் ஆய்வு இப்போது முடிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் வங்கிகளை அமைப்பதற்கான கொள்கை ரீதியிலான ஒப்புதலை வழங்குவதற்கு ஏற்றதாகக் கண்டறியப்படவில்லை. என 6 விண்ணப்பங்களின் ரத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications