கிரிக்கெட் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக விளையாடுவதை நிறுத்திய பின்னர் முழுநேர முதலீட்டாளராக வளம் வருகிறார். இப்படி சச்சின் முதலீடு செய்த ஒரு நிறுவனம் ஒரு நிறுவனம் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் செமிகண்டக்டர் துறையில் இறங்குகிறது.
இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் டாடா குழுமம், முருகப்பா குரூப், பாக்ஸ்கான் - ஹெச்சிஎல் கூட்டணி என பெரும் சாம்ராஜ்ஜியங்களும், சில பல சிறிய நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளது இயங்கி வருகிறது. அப்படி ஒரு நிறுவனம் தான் ஆர்ஆர்பி எலக்ட்ரானிக்ஸ்.

சச்சின் டெண்டுல்கர் முதலீடு செய்துள்ள ஆர்ஆர்பி எலக்ட்ரானிக்ஸ், ஐரோப்பிய கூட்டமைப்புடன் இணைந்து மகாராஷ்டிராவில் முதல் செமிகண்டக்டர் தொழிற்சாலையைத் திறப்பதாக அறிவித்துள்ளது. இந்த அற்புதமான முயற்சி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முக்கியமான ஒரு தொடக்கமாக உள்ளது.
ஆர்ஆர்பி எலக்ட்ரானிக்ஸ் மகாராஷ்டிரா மாநிலத்தின் மஹாபே என்னும் பகுதியில் உள்ள TTC தொழில்துறை பகுதியில் சுமார் 25,000 சதுரடியில் OSAT தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதன் இத்தொழிற்சாலையைப் பிரபல அணு இயற்பியலாளரும், அணுசக்தி ஆணையத்தின் (AEC) முன்னாள் தலைவருமான டாக்டர் அனில் ககோட்கர், சச்சின் டெண்டுல்கர், ஆர்ஆர்பி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனர் ராஜேந்திர கே சோடங்கர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
ஆர்ஆர்பி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில் ரூ. 5,000 கோடி ஆரம்ப முதலீட்டை உறுதியளித்துள்ளது. RRP எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வாகனம், மின்சாரம், மின்னணுவியல் மற்றும் தொழில்துறை சந்தைகளில் சேவை அளிக்கத் தயாராக உள்ளது.

என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா எலக்ட்ரானிக்ஸ் தைவான் நாட்டைச் சேர்ந்த PSMC நிறுவனத்துடன் இணைந்து 2 செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்கிறது. இதோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா குரூப்-ன் கட்டப்பாட்டில் இருக்கும் CG Power and Industrial Solutions, தாய்லாந்து Renesas Electronics உடன் இணைந்து இந்தியாவில் osat தொழிற்சாலை அமைக்க உள்ளது. இந்த 3 திட்டங்களுக்கும் மத்திய அரசு PLI திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பாக்ஸ்கான் - ஹெச்சிஎல் மத்தியிலான கூட்டணி திட்டம் குறித்து மத்திய அரசு அவுட்சோர்ஸ்டு அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் (OSAT) யூனிட் எந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும், இந்த கூட்டணியில் தொழில்நுட்ப பங்காளி யார், இரு பங்காளிகளுக்கும் இடையே தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தின் தன்மை போன்ற கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளது.


Click it and Unblock the Notifications