கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே.
கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு அவர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தார் என்பதும் சில நிறுவனங்களில் முதலீடு செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிரிக்கெட்டை அடித்தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
சச்சின் முதலீடு
Rario.com என்ற கிரிக்கெட் விளையாட்டை அடித்தளமாக கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் சச்சின் டெண்டுல்கர் முதலீடு செய்துள்ளார். இதனை அடுத்து சச்சின் டெண்டுல்கரின் டிஜிட்டல் சேகரிப்புகள் உலகெங்கிலுமுள்ள ரசிகர்களுக்கு சொந்தமாக்க அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வீரர்கள்
ஏற்கனவே இந்நிறுவனம் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களான ஆரோன் பிஞ்ச், ஃபாஃப் டு பிளெசிஸ், குயின்டன் டி காக், ஷகிப் அல் ஹசன், ரிஷப் பந்த், வீரேந்திர சேவாக், ஜாகீர் கான், ஸ்மிருதி மந்தனா, அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் ஆகிய வீரர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் உடன் முதலீட்டு ஒப்பந்தத்தை செய்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள்
இது குறித்து ரேரியோ ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ அங்கித் வாத்வா கூறியதாவது: சச்சின் டெண்டுல்கர் முதலீடு செய்ய முன்வந்தது எங்களது அதிர்ஷ்டம் ஆகும். பில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்ட சச்சின், இப்போது பில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு சேவை செய்யும் எங்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். கிரிக்கெட் கடவுள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதால் இனி எங்கள் வளர்ச்சி வானமே எல்லை' என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட் சமூகம்
கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்ட இந்நிறுவனத்தில் முதலீடு செய்தது குறித்து சச்சின் கூறியபோது, 'NFT தொழில்நுட்பம் ரசிகர்களை கிரிக்கெட் விளையாட்டில் நெருக்கமாகக் கொண்டு செல்வதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. ரோரியோவில் உள்ள குழுவினர் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் ஒரு பொறுப்பான கிரிக்கெட் சமூகம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே எனது டிஜிட்டல் சேகரிப்புகளை ரேரியோ நிறுவனத்தின் மூலம் பிரத்தியேகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியுள்ளார்.
ஐஐடி மாணவர்கள்
ஐஐடி முன்னாள் மாணவர்களான அங்கித் வாத்வா மற்றும் சன்னி பானோட் ஆகியோர் கடந்த 2021ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கினர். தொடங்கிய ஒரே வருடத்தில் சச்சின் டெண்டுல்கரின் கவனத்தை ஈர்த்து அவரிடம் இருந்து முதலீட்டையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications