கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் வெறும் விளையாட்டு வீரர் மட்டும் அல்ல, பணக்கார செலிப்ரிட்டி, பிஸ்னஸ்மேன் என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது இவர் பிராண்ட் அம்பாசிட்டராக இல்லாத ஆடம்பர பிராண்டே இல்லை. ஏன் இப்போது கூட கையில் 10க்கும் அதிகமான பிராண்டுகளின் விளம்பரத்தில் நடித்து வருகிறார்.
கிரிக்கெட் ஒருப்பக்கம், பிராண்ட் என்டார்ஸ்மென்ட் ஒரு பக்கம் என அதிகளவில் சம்பாதித்த சச்சின் டெண்டுல்கர் தான் விரும்பிய காரை உடனே வாங்க கூடியவர். அப்படி சச்சின் டெண்டுல்கர்-யிடம் ஏற்கனவே வியக்க வைக்கும் வகையில் கார் கலெக்ஷன் இருக்கும் நிலையில் மற்றொரு புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார்.
ஆடம்பரத்தின் உச்சம், ஆட்டோமொபைல் டெக்னாலஜியின் உச்சத்தில் இருக்கும் ஒரு பிராண்ட் லம்போர்கினி. கார்கள் மீது அதிகப்படியான ஆர்வம் கொண்ட சச்சின் டெண்டுல்கர் லம்போர்கினி பிராண்டில் இருக்கும் ஓரே SUV காரான உருஸ் எஸ் மாடல் கார்-ஐ வாங்கியுள்ளார். எஸ்யூவி பிரிவில் உலகளவில் மிகவும் காஸ்ட்லியான கார்களில் ஒன்று லம்போர்கினி உருஸ் கார்.
Lamborghini Urus S காரை சச்சின் சுமார் 4.18 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது, ஏற்கனவே பல ஆடம்பர கார்களை வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் புதிதாக லம்போர்கினி உருஸ் எஸ் வாங்க முக்கிய காரணம் இருக்க வேண்டும்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி பல கோடி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில் ஐபிஎல் போட்டி முடிந்த உடனே லம்போர்கினி உருஸ் காரை வாங்கியது அர்ஜூன் டெண்டுல்கர்-க்கு பரிசு அளிப்பதற்காக கூட இருக்கலாம்.

சில மாதங்களுக்கு முன்பு தான் மும்பையில் வெள்ளை நிற Porsche 911 Turbo S காருடன் சச்சின் இருப்பது ஒரு யூடியூபர் படம்பிடித்தார். இந்த வீடியோவில் சச்சின் முகம் சரியாக தெரிவில்லை என்றாலும் Porsche 911 Turbo S பதிவு எண் வைத்து பார்க்கும் போது இது SRT SPORTS MANAGEMENT நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், இந்த கார் சச்சின் டெண்டுல்கர் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் பெயரில் பதிவிடப்பட்டு உள்ளதும் கண்டுப்படிக்கப்பட்டு உள்ளது.
சச்சின் டெண்டுல்கர் மொத்த சொத்து மதிப்பு 1350 கோடி ரூபாய், இன்று கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக இருக்கும் விராத் கோலி, எம்எஸ் தோணி ஆகியோரை காட்டிலும் அதிக சொத்து மதிப்புடன் இருக்கிறார். மேலும் பல முன்னணி இந்தியா மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிட்டராக உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
சச்சின் டெண்டுல்கர் கோகோ கோலா, BMW இந்தியா, அடிடாஸ், பெப்சி, டிவிஎஸ், MRF, பிரிட்டானியா, canon, பிலிப்ஸ், VISA, ரெனால்ட்ஸ், Sanyo BPL, Boost, பஜாஜ், Unacademy, லுமினஸ் இந்தியா, சன்பீஸ்ட், Fiat Palio, தோஷிபா, G-Hanz, ஏர்டெல், கேஸ்ட்ரால் இந்தியா, கோல்கேட் என பல பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிட்டராக உள்ளது.
சச்சின் டெண்டுல்கர் புட்பாலில் இந்தியன் சூப்பர் லீக்-ன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் கோ-ஓனர் ஆகவும் உள்ளார். பேட்மிட்டன் விளையாட்டு அணியான Bengaluru Blasters அணியில் உரிமையாளராகவும், டென்னிஸ் பிரிவில் International Tennis Premier League-ன் (ITPL) மும்பை அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் மும்பை மற்றும் பெங்களூரில் இரண்டு ஹோட்டல்களையும் வைத்துள்ளார். 2016ல் இரண்டு ஆண்களுக்கான ஆடை பிராண்டுகளை உருவாக்கினார் True Blue மற்றும் Arvind Fashions Limited. இது மட்டுமா SRT என்ற தனி Sports Management கம்பெனியும் துவங்கி நிர்வாகம் செய்து வருகிறார்.
சச்சின் டெண்டுல்கர் கார் கலெக்ஷன் நீல மாருதி 800ல் துவங்கி BMW i8, BMW 7-சீரிஸ் 760 Li, BMW M6 கிரான் கூபே, BMW M5 ஜஹ்ரே, BMW X5 M50d, Porsche 911 Turbo S, Ferrari 360 Modena, Fiat Palio S10, மெர்சிடீஸ் பென்ஸ் C36 AMG, நிச்சான் GT-R ஈகோயிஸ்ட் மற்றும் வோல்வோ S80 கார்களை வைத்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications