கோடியில் புரளும் Sachin Tendulkar.. பிராம்மாண்ட வீடு, ஆடம்பர கார்களின் படை, ஏகப்பட்ட பிஸ்னஸ்..!

கிரிக்கெட்-ன் கடவுள் என போற்றப்படும் ஒருவர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். மும்பையில் பிறந்து வளர்ந்த சச்சினுக்கு ஆரம்பம் முதலே கிரிக்கெட் மீதான மோகம் அதிகம், இதனால் அவருடைய தாய் மற்றும் தந்தை இருவருமே இவருடைய கிரிக்கெட் பயிற்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.

இதன் விளைவு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெறும் 16 வயதில் களமிறங்கி தனது வரவாற்று வெற்றி பயணத்தை துவங்கிய சச்சின் டெண்டுல்கர்-க்கு ஏப்ரல் 24 ஆம் தேதி பிறந்த நாள். கிரிக்கெட்டில் 68 அரை சதம் போட்ட சச்சின் வாழ்க்கையில் முதல் அரை சதம் போட்டு உள்ளார், இந்த பிறந்த நாள் உடன் சச்சினுக்கு 50 வயதாகிறது.

கோடியில் புரளும் Sachin Tendulkar.. பிராம்மாண்ட வீடு, ஆடம்பர கார்களின் படை, ஏகப்பட்ட பிஸ்னஸ்..!

50 வயதான சச்சின் டெண்டுல்கர்-ன் மொத்த சொத்து மதிப்பு என்ன தெரியுமா..? இன்று விராட் கோலி, எம்எஸ் தோனி ஆகியோர் விளம்பரங்கள் மூலம் பெரும் பணத்தை சம்பாதிக்க ரோடுமேப் போட்டவர்தான் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை விட்ட பின்பும் பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிட்டராக உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் டெண்டுல்கர் மொத்த சொத்து மதிப்பு 1350 கோடி ரூபாய், இன்று கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக இருக்கும் விராட் கோலி, எம்எஸ் தோனி ஆகியோரை காட்டிலும் அதிக சொத்து மதிப்புடன் இருக்கிறார். மேலும் பல முன்னணி இந்தியா மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

கோடியில் புரளும் Sachin Tendulkar.. பிராம்மாண்ட வீடு, ஆடம்பர கார்களின் படை, ஏகப்பட்ட பிஸ்னஸ்..!

கோகோ கோலா, BMW இந்தியா, அடிடாஸ், பெப்சி, டிவிஎஸ், MRF, பிரிட்டானியா, canon, பிலிப்ஸ், VISA, ரெனால்ட்ஸ், Sanyo BPL, Boost, பஜாஜ், Unacademy, லுமினஸ் இந்தியா, சன்பீஸ்ட், Fiat Palio, தோஷிபா, G-Hanz, ஏர்டெல், கேஸ்ட்ரால் இந்தியா, கோல்கேட் என பல பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக உள்ளது.

இது மட்டும் அல்லாமல் சச்சின் டெண்டுல்கர் புட்பாலில் இந்தியன் சூப்பர் லீக்-ன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் கோ-ஓனர் ஆகவும் உள்ளார். இதேபோல் பேட்மிட்டன் போட்டியில் Bengaluru Blasters அணியில் உரிமையாளராகவும், International Tennis Premier League-ன் (ITPL) மும்பை அணியில் உரிமையாளராகவும் உள்ளார்.

இதோடு மும்பை மற்றும் பெங்களூரில் இரண்டு ஹோட்டல்களையும் வைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். 2016ல் சச்சின் டெண்டுல்கர் இரண்டு ஆண்களுக்கான ஆடை பிராண்டுகளை உருவாக்கினார் True Blue மற்றும் Arvind Fashions Limited. இது மட்டுமா SRT என்ற தனி Sports Management கம்பெனியும் துவங்கி நிர்வாகம் செய்து வருகிறார்.

கோடியில் புரளும் Sachin Tendulkar.. பிராம்மாண்ட வீடு, ஆடம்பர கார்களின் படை, ஏகப்பட்ட பிஸ்னஸ்..!

மேலும் சச்சின் டெண்டுல்கர் Smartron India, JetSynthesys, Spinny, and S Drive, Sach ஆகிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஸ்போர்ட்ஸ் அடிப்படையிலான பொழுதுப்போக்கு நிறுவனமான Smaash Entertainment-ல் முதலீடு செய்துள்ளார். இதோடு 100MB என்ற தனிப்பட்ட இணைய தளத்தையும் வைத்துள்ளார்.

இப்படி பல பிஸ்னஸ், பல கோடிகளை ஒவ்வொரு வருடமும் டர்ன்ஓவர் செய்யும் சச்சின் டெண்டுல்கர் மும்பையின் மிகவும் ஆடம்பரமாக காஸ்ட்லியான பகுதியாக கூறப்படும் பந்தாவில் சுமார் 6000 சதுரடி கொண்ட 3 அடுக்கு ஆடம்பர வீட்டில் தங்கியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் தற்போது 60 முதல் 80 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என கணக்கிடப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கரிடம் ஏகப்பட்ட கார்கள் உள்ளது, நீல மாருதி 800ல் துவங்கி BMW i8, BMW 7-சீரிஸ் 760 Li, BMW M6 கிரான் கூபே, BMW M5 ஜஹ்ரே, BMW X5 M50d, Porsche 911 Turbo S, Ferrari 360 Modena, Fiat Palio S10, மெர்சிடீஸ் பென்ஸ் C36 AMG, நிச்சான் GT-R ஈகோயிஸ்ட் மற்றும் வோல்வோ S80 கார்களை வைத்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+