நகமும் சதையும் போல இந்தியர்களுக்கும் கிரிக்கெட் விளையாட்டுக்கும் இடையிலான பிணைப்பு என்பது பிரிக்க முடியாதது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கையும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இருக்கக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கையும் அளவிட முடியாத ஒன்று.
கிரிக்கெட் வீரர்களை கடவுளாகவே நினைக்கக்கூடிய பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். இப்படி தெய்வத்திற்கு இணையாக வணங்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் சொத்து மதிப்பு என்ன? அவர்களின் வாரிசுகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

சச்சின் டெண்டுல்கள்: காட் ஆஃப் கிரிக்கெட் என அறியப்படும் இவர் கிட்டதட்ட 1250 கோடி ரூபாய் சொத்து மதிப்பினை கொண்டிருக்கிறார். கிரிக்கெட் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதர்களாக செயல்பட்டது மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தது ஆகியவற்றின் மூலம் இவருக்கு இந்த அளவு சொத்து மதிப்பு கிடைத்துள்ளது.
இவரது மகள் சாரா டெண்டுல்கர் சமூக வலைத்தளங்களில் இன்ஃப்ளுயன்சராக இருக்கிறார். மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அப்பாவின் பாதையைப் பின்பற்றி வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக இருக்கிறார்.
சாரா லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பினை முடித்தவர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 6.6 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கின்றனர். 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சாராவின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 1 கோடி ரூபாய்.
அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் முதன் முறையாக விளையாடத் தொடங்கினார். டி20 போட்டியில் மும்பை அணிக்காக விளையாடினார். பல்வேறு கிரிக்கெட் டீம்களிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.
சவுரவ் கங்குலி: முன்னாள் இந்திய அணி கேப்டனான சவுரவ் கங்குலி 634 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து கிரிக்கெட் கமெண்ட்ரி மற்றும் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது மகள் சனா கங்குலி கங்குலியை அடிக்கடி நாம் கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளராக பார்க்க முடியும். இவர் கொல்கத்தாவில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பொருளாதார துறையில் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்கள் பணி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் டிராவிட்: ராகுல் டிராவிட்டின் சொத்து மதிப்பு 320 கோடி ரூபாயாக இருக்கிறது. அவர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக சேர்ந்தார். இவரதுமகன்கள் சமித் மற்றும் அன்வே டிராவிட் ஆகியோர் கிரிக்கெட் உலகில் கால் பதித்துள்ளனர்.
இவர்களில் அன்வே கர்நாடகாவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். ராகுல் டிராவிட் கூட கர்நாடகா அணியின் கேப்டனாக இருந்தவர் தான். இவரும் 15 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் கலந்து கொண்டவர்.
வீரேந்திர சேவா: வீரேந்திர சேவாக்கின் சொத்து மதிப்பு 300 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரிக்கெட் மட்டுமின்றி அவர் பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து இருக்கிறார். இவரது மகன்கள் ஆர்யவீர் மற்றும் வேதாந்த் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அதற்கு பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிகிறது.
கௌதம் கம்பீர்: இவரது சொத்து மதிப்பு 147 கோடி ரூபாய். இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலிலும் நுழைந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதேபோல சுரேஷ் ரெய்னா 200 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவர் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்
Story Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications