இந்திய மக்களின் மிகவும் முக்கியப் பண்டியாகக் கருதப்படும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட இந்திய மக்கள் தயாராகி வரும் நிலையில் நாட்டின் முன்னணி டெக்ஸ்டைல் உற்பத்தி நகமான சூரத் டெக்ஸ்டைல் நிறுவனங்கள் சோகத்தின் உச்சத்தில் உள்ளது.
கடந்த 2 வருடமாகக் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் முழுமையான குறிப்பாகச் சுதந்திரமான தீபாவளி பண்டிகையைக் கொண்டாடத் தயாராக உள்ளனர்.
இந்த நிலையில் சூரத் டெக்ஸ்டைல் மில் நிறுவனங்கள் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
தீபாவளி பண்டிகை
இந்தத் தீபாவளி பண்டிகை வர்த்தக அளவு, பண மதிப்பில் புதிய சாதனையை அடையும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு நடுத்தரப் பொருளாதாரப் பிரிவில் இருக்கும் குடும்பம் குறைந்தபட்சம் 10000 ரூபாய் அளவிலான தொகையை இந்தத் தீபாவளிக்குச் செலவு செய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
சூரத் டெக்ஸ்டைல்
இதனால் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனைக்குத் தயாராகியுள்ளது. இதற்கிடையில் டெக்ஸ்டைல் நகரமான சூரத் டெக்ஸ்டைல் மில்கள் கடந்த வருடத்தைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவான அளவான 8000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை மட்டுமே பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
50 சதவீத குறைவு
இந்த வருடம் விற்பனை சிறப்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டாலும் சூரத் டெக்ஸ்டைல் நிறுவனங்கள் 50 சதவீத குறைவான ஆர்டர்களை மட்டும் பெற்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு என்ன காரணம்..? ரீடைல் சந்தையில் போதுமான டிமாண்ட் இல்லையா..? கடந்த சில நாட்களில் வெளியான கணிப்புகள் தவறா..?
CAIT அமைப்பு
இந்த நிலையில் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கூறுகையில் இந்தியாவில் இருக்கும் ரீடைல் கடை விற்பனையாளர்கள் கடந்த 2 வருட மந்தமான வர்த்தகத்தில் அதிகப்படியான ஸ்டாக் வைத்துள்ளனர். இதைப் பழைய இருப்பைத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் ரீடைல் விற்பனையாளர்கள் இருக்கும் காரணத்தால் புதிய ஸ்டாக் எடுப்பதைக் குறைத்துள்ளனர்.
டிமாண்ட் அதிகம்
ஆனால் இந்த வருடம் இந்திய சந்தையில் எப்போதும் இல்லாத டிமாண்ட் உள்ளது என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார். ரீடைல் நிறுவனங்கள் பழைய ஸ்டாக்-ஐ தீர்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளதால் மக்களுக்குக் கூடுதலான தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications