கோவை: ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவின் கால் பாதம் கொண்ட புகைப்படம் 3200 ரூபாய்க்கு விற்கப்படுவது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 67 வயதான சத்குரு கோவை மாவட்டத்தில் ஈஷா யோகா மையத்தை நிறுவி இருக்கிறார். தற்போது கோயம்புத்தூரின் அடையாளமாக ஈஷா யோகா மையம் மாறி உள்ளது. கோயம்புத்தூர் செல்பவர்கள் பெரும்பாலும் ஈஷா யோகா மையத்திற்கும் சென்று வருகின்றனர்.
அது மட்டும் இன்றி சர்வதேச அளவிலும் ஈஷா யோகா மையம் புகழ்பெற்றுள்ளது. ஏராளமான வெளிநாட்டவர்களும் இந்த யோகா மையத்தில் வந்து தங்குகின்றனர். அவ்வப்போது ஈஷா யோகா மையம் குறித்து சர்ச்சைகள் எழுந்து அடங்கும். இந்த முறையில் அவர்கள் விற்பனை செய்யும் ஒரு பொருள் சர்ச்சையாகியுள்ளது.

ஈஷா யோகா மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியே பல்வேறு பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஜக்கி வாசுதேவின் கால் பாதம் கொண்ட புகைப்படம் 3200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக உள்ளது. இந்த படத்தின் கீழ் "குருவின் பாதங்கள் போற்றப்படுகின்றன ஏனெனில் அவை குருவின் ஆற்றலை அணுகுவதற்கான பாதை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த பாதத்தை வணங்குவதன் மூலம் சத்குருவுடன் ஒரு ஆழமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சமூகவலைதள வாசிகள் பலரும் இது இந்த புகைப்படத்தை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். முன்பெல்லாம் இது போன்றவர்களின் பாதங்களை தொட்டு வணங்குவதற்கு பணம் வசூலிக்கப்படும்.
ஆனால் தற்போது ஜக்கி வாசுதேவ் அதனை அடுத்த கட்டத்துக்கே கொண்டு சென்றுவிட்டார் என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். பாதத்தை புகைப்படம் எடுத்து விற்பனை செய்யும் அளவுக்கு ஈஷா யோகா மையத்திற்கு பொருளாதார பிரச்சினை ஏற்பட்டு விட்டதா ? என ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்குருவின் பாதம் கொண்ட புகைப்படத்தை ஃபிரேம் போட்டு விற்பனை செய்வதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதற்கு சாதகமாகவும் சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
பெரியவர்கள் மற்றும் நாம் குருவாக மதிப்பவர்களின் பாதங்களை தொட்டு வணங்குவது இந்துக்கள் வழக்கமாக செய்வது தானே, அந்த வகையில் சத்குருவை குருவாக ஏற்றவர்கள் அவர் பாதம் கொண்ட போட்டோவை வாங்கி வணங்குகிறார்கள் இதில் என்ன தவறு என ஒரு பயனர் கேள்வி அனுப்பியுள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications