ஜக்கி வாசுதேவ் வரைந்த ஓவியம் 2.3 கோடி ரூபாய்க்கு விற்பனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈஷா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் சிர்கா 2020 எனப் பெயரில் செய் ஓவியம் ஏலம் மூலம் சுமார் 2.3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்தத் தொகையைக் கொரோனா வைரஸ் நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என ஈஷா அமைப்பு தெரிவித்துள்ளது.

 

லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கிராமங்களில் இருக்கும் மக்களுக்கும் உதவும் வகையில் பல்வேறு முயற்சிகளைச் செய்து வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக ஜக்கி வாசுதேவ் வரைந்த ஓவியத்தை ஏலத்தில் விற்பனை செய்து இதன் மூலம் கிடைக்கும் நிதிகளைக் கொரோனா வைரஸ் நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தி வருவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜக்கி வாசுதேவ் வரைந்த ஓவியம் 2.3 கோடி ரூபாய்க்கு விற்பனை..!

இந்த நிதியை கொண்டு கொரோனா முன்களப் பணியாளர்களுக்குத் தேவைப்படும் உணவு, மருத்துவ உபகரணங்கள், முககவசம் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை ஈஷா மையம் வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.

இதேபோல் ஈஷா மையம் சத்குரு ஜக்கி வாசுதேவ் வரைந்த இரு ஓவியத்தை ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதன் மூலம் 9.24 கோடி ரூபாய் அளவிலான நிதியைப் பெற்றது. இந்த நிதிகளையும் கொரோனா வைரஸ் நிவாரணப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லாக்டவுன் காலத்தில் ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் மற்றும் அவரது குடும்பத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் சந்தித்தது இணையம் மற்றும் சமுக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: isha drawing ஓவியம்
English summary

Sadhguru's Painting Circa 2020 Auctioned For Rs 2.3 Crore

Sadhguru's Painting Circa 2020 Auctioned For Rs 2.3 Crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X