பாதுகாப்பான பண பரிவர்த்தனைக்கு டாப் 5 ஆப்ஸ்.. மோசடிகளுக்கு செக்!

சென்னை: இன்றைய டிஜிட்டல் உலகில் பணப்பரிவர்த்தனைக்கு நாம் பயன்படுத்தும் முக்கிய ஆப்கள் உண்மையில் பாதுகாப்பானதா.. என்பது பற்றி யோசித்து இருக்கிறீர்களா? வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பம் எதற்கு உதவுகிறதோ இல்லையோ மோசடி கும்பலுக்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை அபகரிக்கும் வழியை அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் பலரும் சமீப காலமாக அதிக தொகையை இழந்து வருகின்றனர். எனவே, பாதுகாப்பான மற்றும் எளிமையான முறையில் பணம் செலுத்துவதற்கான சிறந்த 5 வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணத்தின் அருமையை சொல்லி தான் புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பதிவைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் அதைப்பற்றி நன்கு தெரிந்திருக்கும் அப்படிப்பட்ட பணத்தை எவ்வளவு பாதுகாப்பாக செலவு செய்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏதேதோ தெரியாத செயலிகளின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வது உங்களுடைய தொகையை இழக்க செய்யும். எனவே நீங்கள் பயன்படுத்தும் செயலிகள் அங்கீகரிக்கப்பட்டவையா.. என்பதைத் தெரிந்து கொண்டு அதன் பிறகு அதனைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு உதவும் வகையில் 5 அங்கீகரிக்கப்பட்ட ஆப்-களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 பாதுகாப்பான பண பரிவர்த்தனைக்கு டாப் 5 ஆப்ஸ்..  மோசடிகளுக்கு செக்!

இந்த செயலிகளைப் பயன்படுத்துவதால் எந்தவித பிரச்சனையும் வராதா.. என்று நீங்கள் கேட்கும் கேள்வி கேட்கிறது. பாதுகாப்பான முறையில் நீங்கள் பயன்படுத்தும் போது எந்தவித பிரச்சனையும் வராது. உதாரணமாக உங்களுடைய OTP, பேங்க் விவரங்கள் மற்றும் UPI பின் போன்றவற்றைப் பிறரிடம், நீங்கள் பகிர்ந்தால் இதிலும் சிக்கல் வரலாம். நீங்கள் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தும் போது எந்தவித பிரச்சனையும் வராமல் தடுக்க முடியும்.

1. BHIM - (Bharat Interface for Money ): BHIM என்பது ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலி ஆகும் . இந்த செயலி ழூலம் எளிதில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இந்த UPI செயலி மூலம் ஒருவர் இன்னொருவருடைய வங்கிக் கணக்குக்கு எளிதில் பணம் அனுப்ப முடியும். தற்போது வங்கிகளுக்கு சென்று வரிசையில் நின்று பணப்பரிவர்த்தனை செய்வது கணிசமாக குறைந்து உள்ளது. இது போன்ற ஆப்களையே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

2. கூகுள் பே (Google pay): கூகுள் பே மூலம் உடனடியாக மற்றும் பாதுகாப்பாக பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். பில்களை உடனடியாக செலுத்தவும் , ஆன்லைனில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் பயன்படுகிறது. என்னதான் ஆன்லைன் டிஜிட்டல் பேமென்ட் தளங்கள் அதிக அளவில் இருந்தாலும் 'google pay' செயலி மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று.

3. போன் பே (phone pay): கூகுள் பே செயலியைப் போலவே, போன் பே செயலியும் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று இதைக் கொண்டு நீங்கள் பலவகையான பில்கள், மொபைல் ரீசார்ஜ், கரண்ட் பில் மற்றும் வங்கி கட்டணங்களைச் செலுத்த முடியும்.

4. அமேசான் பே: அமேசான் பே என்பது அமேசான் நிறுவனத்தின் பிரத்தியேக செயலியாகும். அமேசான் பே மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு பணத்தை செலுத்த முடியும். இந்த அமேசான் பே செயலியைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் போது உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கும். நீங்கள் ஐசிஐசிஐ பேங்க் வாடிக்கையாளராக இருந்தால் 5% கேஷ் பேக் பெற இயலும். அதேபோல நூறுக்கும் மேற்பட்ட அமேசான் பார்ட்னர்களிடமிருந்து, நீங்கள் பணப்பரிவர்த்தனை செய்யும்போது 2 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.

5. Mobikwik: Mobikwik என்பது 2009 இல் நிறுவப்பட்ட ஒரு இந்திய கட்டண சேவை வழங்குநராகும். 2013 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி MobiKwik வாலட்டைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளித்தது. இதனைப் பயன்படுத்தியும் கரண்ட் பில் ரீசார்ஜ் போன்ற எண்ணற்ற சேவைகளை வீட்டிலிருந்து செய்ய முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+