ரூ.2100 கோடி லஞ்ச விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட சாகர் அதானி.. யார் இவர்..?

இந்தியாவின் பணக்காரர்கள் பற்றி பேசும்போது நம் நினைவுக்கு வருவது முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகியோரின் பெயர்கள் தான். அம்பானி அதானி மட்டுமின்றி அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் செல்வ செழிப்பு மிக்கவர்களாக உள்ளனர். கவுதம் அதானியின் சகோதரரான ராஜேஷ் அதானின் மகன் தான் சாகர் அதானி. 30 வயதான இவர் அதானி கிரீன் எனர்ஜியின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

யார் இந்த சாகர் அதானி?: கவுதம் அதானியின் அண்ணன் மகனானா சாகர் அதானி 2015-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அதானி குழுமத்தில் பணியில் சேர்ந்தார். சோலார் எனர்ஜி மற்றும் விண்ட் எனர்ஜி போன்ற துறைகளை வளர்ச்சி பாதையை நோக்கிக் கொண்டு செல்வதில் சாகர் அதானி முக்கிய பங்கு வகித்தார். சாகர் அதானி மற்றும் கவுதம் அதானி ஆகிய இருவரும் சோலார் எனர்ஜி தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

ரூ.2100 கோடி லஞ்ச விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட சாகர் அதானி.. யார் இவர்..?

நீலக்கரி, மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட் துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கியமான தொழில்களில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 62 வயதான கவுதம் அதானி இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். தற்போது இவர் மீதும் இவருடைய உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் மீதும் அமெரிக்கா செக்யூரிட்டி கவுன்சில் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. இந்த ஏழு பேரில் சாகர் அதானியும் ஒருவர். அமெரிக்காவின் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ப்ளூம்பர்க் அறிக்கையின் படி கவுதம் அதானியின் வணிக சாம்ராஜ்யத்தில் முக்கியமான வாரிசாக சாகர் அதானி கருதப்படுகிறார். இவர்களோடு கவுதம் அதானியின் மகன்களான கரன் அதானி மற்றும் ஜீத் அதானி ஆகியோர் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் கவுதம் அதானி முதலீட்டாளர்களிடம் பல மில்லியன் டாலர்களை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து எந்த வித விளக்கத்தையும் இதுவரை அதானி குழுமம் தரவில்லை.

அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி அடுத்த 5 வருடங்களில் சுத்தமான ஆற்றல் திட்டங்களுக்காக 35 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் எதிர்கால எரிசக்தி சேவையை பூர்த்தி செய்யவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் திட்டமிட்டுள்ளது. முதலீடு தொடர்பான இந்த தகவலை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் நடத்தப்பட்ட பொருளாதார மாநாட்டில் தெரிவித்துள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் இந்தியா முழுவதும் பெரிய அளவிலான சூரிய எரிசக்தி ஆலைகள் காற்று எரிசக்தி ஆலைகள் போன்றவற்றை நிறுவனம் அமைக்கவுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தங்கள் நிறுவனத்தை ஒரு முன்னணி நிறுவனமாக நிலை நிறுத்துவதற்காக இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல முதலீட்டில் 85 சதவீதத்தை சுத்தமான ஆற்றல் திட்டங்களுக்காகவும், நாட்டின் உடனடி மின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் ஒதுக்க குழு திட்டமிட்டுள்ளது. இது போன்ற முதலீடு தொடர்பான அறிவிப்புகள் வெளியான போதிலும் அதானி குழுமத்தின் எனர்ஜி பங்குகள் சரிவை கண்டுள்ளன. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்குகள் 1.33% அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 2.33% மற்ற அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் சரிவை சந்தித்தன. அதானி குழுமம் 2047-ஆம் ஆண்டுக்குள் சுத்தமான எரிசக்தி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வெளியாகி இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அதானி குழுமத்திலும் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை. இதனால் சட்ட ரீதியான பிரச்சினைகள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+