கொல்கத்தா: சமூக வலைதளங்கள் பலரது வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளன. தற்போது சமூக வலைத்தளங்களில் கிரியேட்டர்களாக இருப்பவர்கள், பலரது வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமில்லாமல் மிகப்பெரிய அளவில் நிதி ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் வளர்ச்சியை அடைந்துள்ளனர்.
அப்படி சமூக வலைதள சந்தைப்படுத்துதல் மூலம் தொழில்முனைவோராக வளர்ச்சி கண்டிருக்கும் இளம் பெண் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சாஹேலி சாட்டர்ஜி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர். தன்னுடைய 18 வயதிலேயே டிஜிட்டல் உலகில் ஃப்ரீலேன்சராக நுழைந்தவர். சமூக வலைதளங்களின் செயல்பாடு, விளம்பரங்கள் மற்றும் அதில் உள்ள சந்தை வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்து கொண்ட இவர் 18 வயதிலேயே ஃப்ரீலேன்சராக பணியை தொடங்கி விட்டார். முதலில் ரூ.110 தான் இவருக்கு கிடைத்த ஊதியம். ஆனால் தற்போது லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறார்.
சோசியல் மீடியா ஸ்பெஷலிஸ்ட் எனப்படும் சமூக வலைதள சந்தைப்படுத்தலில் வல்லவராக உருவெடுத்துள்ளார். ஒரு நிறுவனம் குறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வது, அதற்கேற்ப கண்டெண்ட்டுகளை உருவாக்குவது, புதிதாக வாடிக்கையாளர்களை அதன் மூலம் கொண்டு வருவது என இந்த துறையில் வளர்ச்சி அடைந்திருக்கிறார் சாஹேலி சாட்டர்ஜி தற்போது புராஜெக்ட்டுக்கு லட்சக்கணக்கில் என வருவாய் ஈட்டி வருகிறார்.
தொழில்முனைவோராகவும் இருக்கும் இந்த இளம்பெண் பல கிரியேட்டர்களையும் , ஃப்ரீலேன்சர்களையும் உருவாக்கி வருகிறார். இரண்டு நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார். இவற்றின் மூலம் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டி வருகிறார்.
ஒரு தொழில் முனைவோராக டிஜிட்டல் உலகை கலக்கி வரும் இந்த இளம்பெண் சமூக வலைதளங்களிலும் லட்சக்கணக்கான ஃபாலோவர்களை கொண்டிருக்கிறார். ஃப்ரீலேன்ஸ் 101 அகாடெமி என்ற பெயரில் ஃப்ரீலேன்சிங் குறித்தும் அதில் எப்படி கிளையண்ட்களை பெறுவது, எப்படி வருவாய் ஈட்டுவது என்பது குறித்து வகுப்புகளை எடுத்து வருகிறார்.
சாஹேலி சாட்டர்ஜியின் வகுப்பில் இணைந்து ஆயிரக்கணக்கானவர்கள் பலனடைந்துள்ளதாக ஃப்ரீலேன்ஸ் 101 அகாடெமி இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். ஆம்பிஃபெம் என்ற ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியையும் இவர் நடத்தி வருகிறார். சோசியல் மீடியா மார்க்கெட்டிங், பர்சனல் பிராண்டிங் மற்றும் புதிய ஒரு தொழிலை தொடங்குவது உள்ளிட்டவற்றுக்கான உதவிகளை இவர் செய்து வருகிறார்.
தற்போதுள்ள 2கே கிட்ஸுக்கு ஏற்ற வகையில் சமூக வலைதளங்களில் ஒரு நிறுவனத்துக்காக விளம்பரங்களையும் கண்டெண்ட்டுகளையும் உருவாக்கி தருவது, பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தருவது என ஒரு சமூகவலை தள பக்கத்தில் ஒரு நிறுவனம் வளர்ச்சி அடைவதற்கான அனைத்து வேலைகளையும் இது செய்து தருகிறது.
சாதாரணமாக தொடங்கிய ஒரு வேலை, தற்போது தொழில்முனைவோராக இவரை மாற்றி இருக்கிறது. ஒரு சின்ன முயற்சி பெரிய வெற்றியை தேடி தரும் என்பதற்கு இவர் உதாரணம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications