வேளாண் கெமிக்கல் நிறுவனமான சஜ்ஜன் இந்தியாவின் விளம்பரதாரரான மாதவ் பிரசாத் அகர்வால், மும்பையின் வோர்லி பகுதியில் 153 கோடி ரூபாய்க்கு ஒரு ஆடம்பர வீட்டினை வாங்கியுள்ளார்.
இந்த ஆடம்பர வீடானது 2022ம் ஆண்டில் மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகும்.
டாக்டர் அன்னி பெசன்ட் சாலையில் உள்ள ஓபராய் டெவபல்லப்பர்ஸின் துணை நிறுவனமான, ஓயாசிஸ் ரியாலிட்டியிலிருந்து சூப்பர் பிரீமியம் குடியிருப்பு திட்டத்தில், 15,337 சதுர அடியுள்ள கட்டமைப்புள்ள வீட்டினை அகர்வால் வாங்கியுள்ளார்.
ஆடம்பர வீடு
இந்த ஆடம்பர வீடானது 24 மற்றும் 25வது அடுக்கு மாடியில் உள்ள சொகுசு வீடாகும். இது 1 லட்சம் சதுர அடிக்கு மேல் மதிப்புடையது. இது நாட்டில் விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றாகும். இந்த பரிவர்த்தனையானது மிகவும் விலை உயர்ந்த அபார்ட்மெண்டில் இடம் பெற்றுள்ளது.
பதிவு கட்டணம்
மாதவ் அகர்வால் தனது மனைவி சுஷ்மாவுடன் இணைந்து இந்த அபார்ட்மெண்டினை வாங்கியுள்ளார்.
இந்த விலையுயர்ந்த ஆடம்பர அபார்ட்மெண்ட் வீடு, அக்டோபர் 20 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவுக்காக அகர்வால் 9.18 கோடி ரூபாயினை செலுத்தியுள்ளார். இந்த விலையுயர்ந்த வீட்டில் 6 கார் பார்க்கிங் வசதியினையும் அகர்வால் பெறுவார் என கூறப்பட்டுள்ளது.
பங்கு விற்பனைக்கு ஒப்புதல்
இந்த ஆண்டு பிப்ரவரியில் தனியார் ஈக்விட்டி நிறுவனமாக சிவிசி கேப்பிட்டல் பார்ட்னர்ஸ், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட போர்ட்போலியோ நிறுவனமான சோனா நிறுவனம் சஜ்ஜன் இந்தியாவில் பங்குகளை வாங்குவதற்கு இந்தியாவின் போட்டி ஆணையத்தின் (CCI) ஒப்புதலை பெற்றுள்ளது.
கெமிக்கல் உற்பத்தி
சஜ்ஜன் நிறுவனம் பல்வேறு விதமான விவசாயம் சார்ந்த கெமிக்கல்கள், சிறப்பு கெமிக்கல்கள், ரசாயன கலவைகள், இரசாயன எதிர்வினைகளை உற்பத்தி செய்து வருகின்றது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ள நிலையில், இந்த சொத்து கையகப்படுத்தலானது வந்துள்ளது.
ரொமேஷ் சோப்தி வீடு
இந்த திட்டத்தில் பல தொழிலதிபர்கள் மற்றும் உயர்மட்ட வல்லுனர்கள் சொத்துகள் எடுப்பதைக் கண்டுள்ளது. சமீபத்தில் மூத்த வங்கியாளரும், இந்தஸ் இந்த் வங்கியின் முன்னாள் எம்டி மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரொமேஷ் சோப்தியும், இந்த சூப்பர் சொகுசு திட்டத்தில் இரண்டு கடல் பார்வை அடுக்குமாடி குடியிருப்புகளை 76.30 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
சித்தார்த் ஜெயின்
சமீபத்தில் ஐனாக்ஸ் குழுமத்தின் புரோமோட்டர் குடும்பத்தை சேர்ந்த சித்தார்ர்த் ஜெயின், ரஹோஜா லெஜண்ட் என்ற மற்றொரு சூப்பர் பிரீமியம் அபார்ட்மெண்டில் உள்ள சொகுசு, குவார்ட்ப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பினை 144 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
ரியல் எஸ்டேட் சந்தை
நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் சந்தையான மும்பையில், சமீபத்தில் முத்திரை கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து ரியல் எஸ்டேட் வணிகத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இது வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், பதிவு கட்டணம் குறைந்துள்ளது. இது ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ரியல் எஸ்டேட் முதலீடுகள்
சமீப காலமாக இந்தியாவில் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் முதலீடுகளை ஊக்குவித்துள்ளது. குறிப்பாக மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வீடு, அபார்ட்மெண்ட் விற்பனையை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications