JSW குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் மற்றும் ஷாங்காய் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் SAIC மோட்டார் கார்ப்-க்கு சொந்தமான பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் நிறுவனமான MG எனப்படும் மோரிஸ் கெராஜ்-ன் இந்திய வர்த்தகத்தில் பெரும் பகுதியை வாங்குவதில் பல மாத பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளது
MG மோட்டார் இந்தியா முழுமையான உரிமையாளராக இருப்பது சீனாவின் SAIC மோட்டார் கார்ப், இந்த நிறுவனத்திடம் இந்திய வர்த்தகத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்கி ஆட்டோமொபைல் துறைக்குள் குறிப்பாக எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணியில் இறங்க திட்டமிட்டார் சஜ்ஜன் ஜிண்டால்.

இதற்காக சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான குழு பல முறை சீனா சென்ற, சீனாவின் SAIC மோட்டார் கார்ப் அதிகாரிகளும் பல முறை இந்தியா வந்தனர். இது சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் என்பதால் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது, MG மோட்டார் கார்கள் தற்போது இந்தியாவில் ஒரு ஸ்டைல் ஸ்டேட்மென்ட் ஆக மாறி வருகிறது.
இப்படியிருக்கையில் MG மோட்டார் இந்தியா சுமார் 1 பில்லியன் டாலர் அளவில் மதிப்பிடப்பட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. SAIC மோட்டார் கார்ப் இந்தியாவில் அதன் உற்பத்தியை கியா மோட்டார்ஸ் போல் உயர்த்த முடியாமல் மாட்டிக்கொண்ட நிலையிலும், சஜ்ஜன் ஜிண்டால் கொடுத்த ஆஃபர் லாபகரமானதாக இருந்த காரணத்தால் ஒப்புக்கொண்டது.
சஜ்ஜன் ஜிண்டால், SAIC மோட்டார் கார்ப் திட்டமிடப்பட்ட ஒப்பந்தத்தில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாவிட்டால், இந்த மாத இறுதியில் அல்லது தீபாவளிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். மேலும் ஜனவரி 2024க்குள் MG மோட்டார் இந்தியா புதிய கார்ப்பரேட் நிர்வாக கூட்டணியின் கீழ் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்புதிய ஒப்பந்தத்தின் கீழ் MG மோட்டார் இந்தியா நிறுவனத்தில் SAIC மோட்டார் கார்ப் 51 சதவீத பங்குகளையும், 32-35% சதவீத பங்குகளை சஜ்ஜன் ஜிண்டால்-ன் எம்ஜி மோட்டார் இந்தியா பெற உள்ளதாகவும், இந்திய நிதி நிறுவனங்களிடம் 8 சதவீத பங்குகளும், எம்ஜி இந்தியாவின் டீலர்கள் மற்றும் ஊழியர்களிடம் 6-7 சதவீத பங்குகளும் இருக்கும்.
சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான JSW குழுமம் பல துறையில் இயங்கி வரும் வேளையில் புதிதாக கார் தயாரிப்பில் இறங்க உள்ளது, இக்கூட்டணி சென்னையில் இருக்கும் போர்டு தொழிற்சாலையை வாங்க திட்டமிட்டு இருந்தாக கூறப்பட்டது. இதேபோல் சஜ்ஜன் ஜிண்டால் பல முறை ஆட்டோமொபைல் துறைக்குள் இறங்க முயற்சி செய்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications