நடிகர் பிரிதிவிராஜ் சுகுமாரன் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் பிரபாஸ்-ன் சலார் படம் பாக்ஸ் ஆபீஸ்-ல் புதிய சாதனைகளை படைத்து வரும் வேளையில், இப்படத்தில் பிரிதிவிராஜ் வரதராஜா மன்னார் என்ற கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார்.
பிரிதிவிராஜ் சுகுமாரன் பாலிவுட்டில் dreamum wakeupum பாடலுக்கு பின்பு சலார் படத்தின் மூலம் மீண்டும் பிரபலமாகியுள்ளார். பிரிதிவிராஜ் சினிமா தயாரிப்பு, இயக்கம் உள்பட பல துறைகள் மூலம் மிக அதிகமாக சம்பாதித்துள்ளார். தேசிய பிலிம் விருதை பெற்ற பணக்கார நடிகராக பிரிதிவிராஜ் உள்ளார்.

பிரிதிவிராஜின் நிகர சொத்து மதிப்பு 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.54 கோடி ஆகும். மலையாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ள பிரிதிவிராஜ் ஒரு படத்துக்கு ரூ.4 முதல் 10 கோடி வரை வாங்குவதாகக் கூறப்படுகிறது.
நடிகர் மோகன்லாலை வைத்து இயக்குராக அறிமுகமான லூஸிபர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றி பிரிதிவிராஜுக்கு மற்றும் ஒரு சாதனை இடத்தைப் பெற்றுத் தந்தது. பிரிதிவிராஜும் அவரது மனைவி சுப்ரியா மேனனும் சேர்ந்து பிரிதிவிராஜ் புரொடக்ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை 2018 ஆம் ஆண்டில் தொடங்கினர்.
அந்த பேனரில் டிரைவிங் லைசன்ஸ், கடுவா போன்ற வெற்றிப் படங்களை தயாரித்தார். கல்யாண் சில்க், அசெட் ஹோம்ஸ் போன்ற பல பிராண்டுகளுக்கு விளம்பர அம்பாசிடராகவும் பிரிதிவிராஜ் இருக்கின்றார். இதோடு பிற மொழி படங்களை கேரளாவில் டிஸ்ட்ரிபியுஷன் செய்வது மூலம் பெரும் பணத்தை சம்பாதித்து வருகிறார்.
சலார் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் பிரிதிவிராஜ் இதற்காக ரூ.4 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். பிரிதிவிராஜ் தனது குடும்பத்தாருடன் கேரளாவின் கொச்சியில் வசிக்கிறார்.
2022இல் மும்பை-யின் பாலி ஹில்லில் உள்ள பரிஷம் என்ற ஃபிளாட்டை வாங்கினார். இதன் விலை ரூ.17 கோடி. மலையாள திரையுலகினர் பலரை போல பிரிதிவிராஜ்-ம் ஒரு கார் பிரியர். அவரிடம் ரூ.4.22 கோடி மதிப்புள்ள லம்பார்கினி உருஸ், ரூ.3.30 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் ஏஎம்ஜி ஜி 63 மாடல் கார் உள்ளது. அதன் நம்பர் பிளேட் 0001.
அத்துடன் ரூ.2.45 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் வோக் காரும் லேண்ட் ரோவர் டிபெண்டர் 110 காரும் வைத்துள்ளார். இதன் விலை ரூ.2.30 கோடியாகும். இதுதவிர ரூ.1.96 கோடி மதிப்புள்ள போர்ஷே கேய்னெ கார் ஒன்றும் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications