2023ல் 10% சம்பள உயர்வு உறுதி.. மாத சம்பளக்காரர்கள் கொண்டாட்டம்..!

இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு இந்தியர்கள் 10% ஊதிய உயர்வை பெறுவார்கள் என WTW's அறிக்கை தெரிவித்துள்ளது.

WTW's அறிக்கையின்படி 2023 இல் சீனாவில் 6 சதவீதமும், வியாட்நாமில் 8 சதவீதமும், இந்தோனேசியாவில் 7 சதவீதமும் மற்றும் சிங்கப்பூரில் சம்பள உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என கூறியுள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இந்தியர்கள் 10% வரை அவர்களின் சம்பளத்தில் உயர்வை பெறலாம் என பிரபல புரோக்கிங் மற்றும் சொல்யூசன் நிறுவனமான WTW's அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 2019 டூ 2022 - சம்பள உயர்வு விகிதம்!

2019 டூ 2022 - சம்பள உயர்வு விகிதம்!

இந்தியாவில் கோவிட்-19 காலங்களில் ஊழியர்களின் சம்பளமானது பல துறையில் குறையத் தொடங்கியது, சில துறையில் தாறுமாறாக அதிகரிக்க துவங்கியது. WTW's அறிக்கையின்படி 2019 இல் 9.9% ஆக இருந்த ஊழியர்களின் சம்பள உயர்வு, 2020 இல் 7.5 சதவீதமாகவும், 2022 இல் 8.5 சதவீதமாகவும், 2022 இல் 9.8 சதவீதமாகவும் இருந்தது.

 கொரோனா தொற்று

கொரோனா தொற்று

2023 ஆம் ஆண்டில் சீனாவை தவரி பெரும்பாலான உலக நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து 99 சகவீதம் வரையில் வெளியேறி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் வர்த்தகம், உற்பத்தி ஆகியவையும் கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்திற்கு இணையாக ஒரு வளர்ச்சியை அடைந்து வருகிறது.

 எந்தத் துறையில் சம்பள உயர்வு இருக்கும்!

எந்தத் துறையில் சம்பள உயர்வு இருக்கும்!


WTW's அறிக்கையின்படி பைனான்சியல் சர்வீசஸ், டெக் மீடியா, கேமிங், பாராமெடிக்கல், பயோ டெக்னாலஜி மற்றும் கெமிக்கல், சில்லறை வர்த்தக துறைகளில் 10% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.

 பாதிப்பு யாருக்கு

பாதிப்பு யாருக்கு

ஆனால், durable goods மற்றும் non-durable goods உற்பத்தி நிறுவனங்கள், பிசினஸ் அவுட்சோர்சிங் துறைகள் சரிவின் காரணமாக சம்பள உயர்வுகள் சந்தை சராசரி அளவை காட்டிலும் குறைவாகவே இருக்கும் எனவும் WTW's அறிக்கை கூறுகிறது.

 WTW இந்தியா தலைவர் கருத்து!

WTW இந்தியா தலைவர் கருத்து!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் அனுபவம், அறிவுள்ள பணியாளர்கள் இருப்பது தான் 2023 ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக WTW India-வின் தலைவர் ராஜூல் மாத்தூர் கருத்து தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருப்பதும் முக்கிய காரணம்.

 நிறுவனங்கள்

நிறுவனங்கள்

மேலும் நிறுவனங்கள் தங்களின் வரவு, செலவுகளை சரியாக திட்டமிடுதலின் மூலமும், பொருளாதார ஏற்ற, இறக்கங்கள் மற்றும் சரியான பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது போன்றவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் WTW இந்தியா தலைவர்.

 இந்திய நிறுவனங்கள் முன்னேற்றம்!

இந்திய நிறுவனங்கள் முன்னேற்றம்!

2023 இல் கிட்டத்தட்ட 80 சதவீத இந்திய நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் அதன் வணிக வருவாயை உயர்த்தும் கண்ணோட்டத்தில் செயல்பட்டு வருவதாகவும், இதன்மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்சிக்கு இது ஒரு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கும்.

 இந்தியாவின் GDP உயர்வு!

இந்தியாவின் GDP உயர்வு!

ரிசர்வ் வங்கி கூற்றின்படி 2023 இல் உள்நாட்டு உற்பத்தியானது பெருகுமேயானால் நாட்டில் Gross domestic product (GDP) 7 சதவீதம் வரை முன்னேறிச் செல்லும் எனத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2023 இல் இந்தியாவிற்கு ஒரு முன்னேற்ற காலமாக இருக்கும் எனவும், இந்தியர்களின் சம்பளமும் உயரும் எனவும் நம்பலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+