மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருடம் முழுவதும் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பது வருடத்தின் இறுதியில் கிடைக்கும் சில சதவீத சம்பள உயர்வுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் தான்.
அதிலும் குறிப்பாக கார்ப்ரேட் பணியில் இருப்பவர்கள் மூன்லைட்டிங் கூடச் செய்ய முடியாத, பல நெருக்கடிக்கு மத்தியில் சம்பள உயர்வையும், பதவி உயர்வையும் மட்டுமே நம்பி பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான ஊழியர்களின் பர்பாமென்ஸ்-ஐ கணக்கிட்டு, ஏப்ரல் 2024ல் சம்பள உயர்வும், பதவி உயர்வும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளிக்கும். இந்த நிலையில் இந்திய நிறுவனங்கள் இந்த வருடம் எவ்வளவு சம்பள உயர்வு கொடுக்கும் எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
2024 ஆம் ஆண்டில் இந்திய ஊழியர்களுக்குச் சராசரியாக 9.5% சம்பள உயர்வை வழங்க வாய்ப்புள்ளது, இது 2023 ஆம் ஆண்டில் 9.7% ஒப்பிடுகையில் சற்று குறைவாக இருக்கும் என்று உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமான Aon தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 45 துறையில் உள்ள 1,414 நிறுவனங்களின் தரவுகளின் அடிப்படையில் Aon நிறுவனம் செய்த கணிப்புகளின் படி, நான்கில் மூன்று நிறுவனங்கள் இந்த ஆண்டு 9% க்கும் அதிகமான ஊதிய உயர்வை வழங்கக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது.
தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சேவைகள், ஈகாமர்ஸ் மற்றும் சில்லறை வணிகம் போன்ற சில துறைகளில் நிலவும் மந்தமான வணிக உயர்வு காரணமாக இந்த வருடம் சம்பள உயர்வு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. சரி இந்த வருடம் எந்தெந்த துறைக்கு எவ்வளவு சம்பள உயர்வு அளிக்கப்படும் என்பதை இப்போது பார்ப்போம்.
இன்ஜினியரிங் மற்றும் NBFC பிரிவில் இருக்கும் மின்வணிக நிறுவனங்கள் இந்த வருடம் தங்கள் ஊழியர்களுக்குச் சராசரியாக 10% க்கும் அதிகமான சம்பள உயர்வுகளை வழங்கக்கூடும் என்று Aon ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
இதைத் தொடர்ந்து ஆட்டோமொபைல்கள், நிதி நிறுவனங்கள், FMCG, டெக் பிளாட்பார்ம்ஸ் மற்றும் ப்ராடெக்ட்ஸ், GCC-க்கள் ஆகியவை 9.5-9.9% அளவில் சம்பள உயர்வு அளிப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் ஈகாமர்ஸ் (9.2% - 9.6%), ரீடைல் வர்த்தகங்கள் (9.2% இலிருந்து 8.4%), ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் (9% இலிருந்து 8.5%), டெக் கன்சல்டிங் மற்றும் சர்வீசஸ் (8.2% முதல் 9.1% வரை) அளவில் சம்பள உயர்வை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்க எந்தத் துறையில் பணியாற்றுகிறீர்கள் என்பதைக் கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications