AI வருகையால் 2027-இல் அதிக சம்பளம் பெறப்போகும் டாப் 5 செக்டார்! IT துறைக்கு ஊதிய உயர்வு எப்படி இருக்கும்?

ஒவ்வொரு ஊழியருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு என்னவென்றால் வருகின்ற வருடத்திலாவது சம்பள உயர்வு கிடைக்குமா என்பதுதான். அந்த வகையில் AI வருகையால் வருகின்ற 2027-ஆம் ஆண்டு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும் என்பதை ஏயோன் நிறுவனம் கணித்துள்ளது. சில துறைகளுக்கு 9.5 சதவீதத்திற்கும் அதிகமான சம்பள உயர்வு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரம் மற்ற துறைகளில் சற்று குறைவான ஊதியம் வழங்கப்படலாம்.

1200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் டேட்டாவை அடிப்படையாகக் கொண்டு, 45 தொழில் துறைகளை ஆராய்ந்து ஏயோன் நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதிக சம்பளம் பெற போகும் துறைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

வங்கிசாரா நிதி நிறுவனங்கள்: NBFC என்று சொல்லப்படுகிற வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு 2027-ஆம் ஆண்டில் அதிகபட்சம் 10.1% வரை சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக ஏயோன் நிறுவனம் கணித்துள்ளது. ஏராளமானோர் ஹோம் லோன், கார் லோன் போன்றவற்றைப் பெற்று வருவதால் பைனான்ஸ் மற்றும் டெக்னாலஜி தெரிந்த ஊழியர்களுக்கான தேவை வங்கிசாரா நிதி நிறுவனங்களில் அதிகரித்து வருகிறது.

AI வருகையால் 2027-இல் அதிக சம்பளம் பெறப்போகும் டாப் 5 செக்டார்! IT துறைக்கு ஊதிய உயர்வு எப்படி இருக்கும்?

எனர்ஜி செக்டார்: பெட்ரோலியம், டீசல், எரிவாயு மற்றும் மின்சார துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு 9.9 சதவீதம் வரை 2027-ஆம் ஆண்டில் சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற துறைகளைக் காட்டிலும் இரண்டாவது அதிக ஊதியம் பெறப்போகும் துறையாக எனர்ஜி செக்டார் உருவெடுத்துள்ளது.

Also Read

ரியல் எஸ்டேட்: 2026-ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு 10.3 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைத்தது. ஆனால் அதோடு ஒப்பிடுகையில் 2027-ஆம் ஆண்டு 9.8 சதவீதமே உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக சம்பளம் பெறப்போகும் டாப் 3 துறைகளில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையும் அடங்கும்.

பயோடெக்னாலஜி துறை: மருந்து உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் லைஃப் சயின்ஸ் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2027-ஆம் ஆண்டில் 9.6 சதவீதம் வரை சம்பள உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு ஏற்ப இந்தத் துறையில் மருந்து உற்பத்தி செய்யவும், ஆராய்ச்சியில் ஈடுபடவும் அதிக அளவிலான ஊழியர்கள் தேவைப்பட்டுகின்றனர்.

முதலீட்டு துறை: பைனான்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு 2027-ஆம் ஆண்டில் 9.6 சதவீத சம்பள உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் முதலீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவிட்டது. ஏதாவது ஒரு திட்டத்திலாவது தங்களுடைய சேமிப்பை செய்து வருகின்றனர். இது போன்ற நபர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி அவர்களை வழிநடத்துவதற்கு அதிக அளவிலான ஆட்கள் தேவைப்படுகின்றனர். எனவே இந்தத் துறையில் பணிபுரிபவர்கள் டாப் 5 பட்டியலில் வருகின்றனர்.

IT துறை: IT துறையைப் பொறுத்தவரையில் நிறுவனங்களுக்கு ஏற்ப சம்பள உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு 9.5 சதவீதம் வரை சம்பள உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐடி சர்வீஸ் மற்றும் கன்சல்டிங் துறையில் பணிபுரிபவர்களுக்கு சற்று குறைவாக 6.6% சம்பள உயர்வு கிடைக்கவுள்ளது. GCC மையங்களில் பணிபுரிபவர்கள் சுமார் 9.4 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்.

அதே நேரம் ரீடைல் துறையில் இருப்பவர்களுக்கு 9.4%, FMCG என்று சொல்லப்படுகிற நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் 9.6 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+