தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளத்தை ரூ.12,500லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். மேலும், மே மாதத்தில் ஊதியம் வழங்கப்படாத சூழலில், இனி அந்த மாதத்திலும் ரூ.10,000 ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர மற்றும் இடைநிலை ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்டது.
போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது சம்பள உயர்வுக்கான அறிவிப்பு வந்துள்ளது. அமைச்சர் கூறுகையில், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் ரூ.3,548 கோடி கோரப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னும் கிடைக்காத நிலையில், தமிழக அரசே செலவுகளை ஏற்றுக்கொண்டு சம்பள உயர்வை வழங்குகிறது என கூறினார்.
இந்த நிலையில் பகுதிநேர மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கிடைக்கும் சம்பள உயர்வை குடும்பத்தின் எதிர்கால தேவை, சொந்த வீடு வாங்குவதற்கு, பிள்ளைகளின் கல்வி போன்ற பல முக்கியமான விஷயங்களுக்காக முதலீட்டு செய்யலாம்.

அப்படி ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் கூடுதலாக 2500 ரூபாய் தொகையை எப்படியெல்லாம் முதலீடு செய்து பணத்தை பல மடங்கு பெருக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம். இந்த முதலீடு ஒவ்வொருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனை பொருத்து மாறுப்படும், இதனால் உங்களுக்கான திட்டம் எது என்பதை பார்க்கலாம்.
முதலீட்டு திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்..?
மாதம் ரூ.2500 என்பது சிறிய தொகையாக தோன்றினாலும், இதை தொடர்ந்து முதலீடு செய்யதால் சில வருடத்தில் பெரும் தொகையை சேமிக்க முடியும். இதேபோல் உங்களுடைய நிதி இலக்குகள், கால அளவு மற்றும் ஆபத்து தாங்கும் திறன் ஆகியவற்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதன் பின்பு தான் முதலீட்டு செய்ய துவங்க வேண்டும்.
சொந்த வீடு வாங்குவது போன்ற நீண்ட கால இலக்குகளுக்கு பெரும்பாலானவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் SIP சிறந்த தேர்வாக இருக்கும். இது பணவீக்க பாதிப்பை குறைப்பது மட்டும் அல்லாமல் வங்கி வைப்பு நிதியை காட்டிலும் அதிகளவிலான வருமானத்தை வழங்கும் காரணத்தால் நீண்ட கால முதலீட்டுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த நீண்ட கால இலக்கு என்பது 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் காலம் கொண்டது.
முதலீட்டுக்கு முன் முக்கியமாக கவனிக்க வேண்டியவை
முதலீட்டு காலம்: நீங்கள் முதலீடு செய்யும் பணம் உங்களுக்கு எப்போது தேவைப்படும்? 3 ஆண்டுகளுக்குள் தேவைப்பட்டால் பாதுகாப்பான, குறைந்த ஆபத்து கொண்ட திட்டங்களை தேர்வு செய்யுங்கள்.
5-10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீண்ட கால இலக்குகளுக்கு (குழந்தை கல்வி, சொந்த வீடு, ஓய்வூதியம் போன்றவை) ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் போன்ற அதிக வருமானம், கூடுதல் ரிஸ்க் கொண்ட திட்டங்களை தேர்வு செய்யலாம்.
ரிஸ்க் தாங்கும் திறன்: அடுத்தாக உங்களால் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களை ஏற்க முடியுமா அல்லது குறைவான வருமானம் வந்தாலும் ஓகே, ஆனால் உறுதியாக வருமானம் கிடைக்க வேண்டும். இதில் நீங்கள் எந்த ரகம் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள்.
இப்போது உங்களுடைய ரிஸ்க் லெவல், முதலீட்டு காலம் குறித்த புரிதல் வந்திருக்கும். அடுத்த ஸ்டெப்-க்கு போவோம் வாங்க.
மாதம் ரூ.2500 முதலீட்டுக்கு சிறந்த திட்டங்கள்
ரிஸ்க் குறைவாக எடுக்க விரும்புவோர்களுக்கு: பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (PPF) சிறந்தது. தற்போது 7.1% வட்டியில் உங்கள் முதலீட்டுக்கான வருமானம் கிடைக்கிறது. இதற்கு வரி விலக்கும் உள்ளது, முழுமையாக பாதுகாப்பானது. ஓய்வூதியம் அல்லது நீண்ட கால சேமிப்புக்கு ஏற்றது.
குறுகிய கால இலக்குகளுக்கு: ரெக்கரிங் டெபாசிட் (RD) அல்லது நேஷனல் சேவிங்ஸ் சர்ட்டிஃபிகேட் (NSC). RD வட்டி வங்கிகளைப் பொறுத்து 5-8.5% வரை உள்ளது. NSC தற்போது 7.7% வட்டி தருகிறது. பாதுகாப்பானது, வரி சலுகை உள்ளது.
நடுத்தர ஆபத்து மற்றும் நீண்ட கால இலக்குகளுக்கு: மியூச்சுவல் ஃபண்ட் SIP சிறந்தது. பங்குச்சந்தை தொடர்பான முதலீடுகளுக்கு வருமானம் 12-15% அல்லது அதற்கு மேல் நீண்ட காலத்தில் கிடைக்கும்.
உயர் ஆபத்து மற்றும் வரி சேமிப்புக்கு: ELSS (Equity Linked Savings Scheme) ஃபண்ட்கள். 3 ஆண்டு லாக்-இன் உள்ளது. செக்ஷன் 80C-யின் கீழ் வரி சலுகை உள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட்
நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து மாதம் 2500 ரூபாய் முதலீடு செய்ய விரும்புவோருக்கு மியூச்சுவல் பண்ட் SIP சிறந்தது. ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் அக்ரெசிவ் ஹைப்ரிட் ஃபண்ட் தேர்வு செய்யலாம் - ஈக்விட்டி மற்றும் டெபிட் இரண்டும் இருப்பதால் ஆபத்து குறைவு.
நடுத்தர ஆபத்து மற்றும் 10+ ஆண்டுகள் கால இலக்கு கொண்டவர்கள் ஒரு ஃப்ளெக்ஸி-கேப் ஃபண்ட் அல்லது லார்ஜ்-கேப் இன்டெக்ஸ் ஃபண்ட் போதுமானது. இவை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து உங்கள் முதலீட்டை பன்முகப்படுத்தும்.
அதிகப்படியான ஆபத்துகளை ஏற்க தயாராக இருப்பவர்களுக்கு ஃப்ளெக்ஸி-கேப் மற்றும் மிட்-கேப் ஃபண்ட்களை கலந்து முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

அமெரிக்க தலைநகரை ஆளப்போகும் தமிழ் பெண்..!! தேனி டூ வாஷிங்டன்..!! யார் இந்த ரினி சம்பத்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications