சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற இந்தியாவின் பெரு நகரங்களில் எல்லாம் வேலை கிடைப்பது கூட எளிது ஆனால் குறைந்த விலைக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிகவும் கடினமானதாக மாறிவிட்டது .
சில அடிப்படை வசதிகளோடு ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டை பார்த்தால் கூட அதன் வாடகை மதிப்பு 20 ஆயிரம் ரூபாய் வரை வந்து விடுகிறது. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகள் 50,000 ரூபாய்க்கு மேல் கூட வாடகைக்கு விடப்படுகின்றன. நாம் வாடகைக்கு பார்க்கக்கூடிய அந்த இடம் அந்த இடத்தின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அந்த வீட்டிற்க்கான வாடகை என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது.

இருந்தாலும் சராசரியாகவே இந்தியாவின் பெருநகரங்களில் எல்லாம் ஒரு படுக்கை அறை கொண்ட வீடு என்றால் 13,000 ரூபாய் முதலும் இரண்டு படுக்கையறை கொண்ட வீடு என்றால் 25,000 ரூபாயிலிருந்து நான் வாடகைக்கு கிடைக்கின்றன. வீட்டு வாடகை மதிப்பு உயர் இவ்வளவு உயர்ந்திருந்தாலும் அதற்கேற்ப சம்பளம் இருக்கிறதா என்றால் பெரும்பாலான நபர்களுக்கு இல்லை என்பது தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.
பிரபல நிதி ஆலோசகரான சுஜய் லிங்குடின் பக்கத்தில் இந்தியாவின் பெரு நகரங்களில் வீட்டு வாடகை மதிப்பும் சராசரி மக்களின் வருமானமும் எப்படி தொடர்பே இல்லாமல் இருக்கிறது என்பதை விரிவாக பதிவு செய்து இருக்கிறார். லட்சக்கணக்கான மக்கள் வேலை தேடி வருகிறார்கள் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சராசரியாக 35 லிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்குள் தான் சம்பளம் இருக்கிறது .அவ்வாறு இருக்கும் போது அதில் ஒரு பெரிய அளவிலான தொகை வீட்டு வாடகைக்கு சென்று விடுகிறது.
மும்பை பொறுத்தவரை சராசரி மாதாந்திர வருமானம் 25 ஆயிரம் ரூபாய் தான் ,அந்த நகரின் ஒரு படுக்கை அறை வீட்டிற்கான வாடகையும் இதே தான் என்கிறார். பெங்களூருவில் சராசரி வருமானம் 28,400 ரூபாய் அங்கே வீட்டு வாடகை மதிப்பு ஒரு படுக்கை அறைக்கு சராசரியாக 20000 ரூபாய் சென்னையிலும் இதே நிலைமை தான் இருக்கிறது . இந்தியாவின் மற்ற மெட்ரோ நகரங்களும் இதே நிலைமையை நோக்கிதான் வேகமாக வளர்ந்து வருகின்றன.
அதாவது நம்முடைய வருமானத்தில் பாதி தொகை அல்லது 75% வாடகைக்கே சென்று விடுகிறது . ஒரு பெரிய நகரத்தில் உங்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் வருமானம் வருகிறது என்றால் அதில் பாதி அல்லது அதற்கு மேல் நீங்கள் வாடகைக்கு கொடுத்து விட வேண்டும் என்கிறார். இது தவிர நமக்கான மளிகை பொருட்கள், போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவற்றை சேர்த்தால் வாங்கும் சம்பளம் நம் ஒருவருக்கே கூட பத்தாது என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.
பல்வேறு துறைகளிலும் ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தவே இல்லை ஆனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மட்டும் ஒவ்வொரு மாதமும் சொத்துக்களின் விலையும் வீடு வாடகையும் விலையும் உயர்த்தி கொண்டே போகின்றன இதுதான் இந்த நிலைமைக்கு காரணம் எனக் கூறியிருக்கிறார்.
ஒரு பெரிய நகரத்திற்கு சென்றுவிட்டால் நல்ல வருமானம் ஈட்டி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று இருந்த சூழல் தற்போது மாறி வருகிறது என்றும் வாடகைக்கு வீடு எடுப்பது என்பதே ஒரு ஆடம்பரமான விஷயமாக இருக்கிறது என்றும் கூறுகிறார். பெரிய நகரத்தில் சென்று வேலை செய்ய வேண்டும் என்ற கனவு நிஜமாகவே உங்களுக்கு எதையுமே பெற்று தரப்போவதில்லை என கூறியிருக்கும் அவர் வாழ்க்கையில் வெற்றி என்பது நாம் எந்த நகரத்தில் வேலை செய்கிறோம் வசிக்கிறோம் என்பதில் இல்லை என சுட்டிக்காட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications