சேலம்: ஐடி மற்றும் ஐடீஸ் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், சேலம் ELCOT SEZ ஐடி பார்க்கில் HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பிபிஓ (BPO - Business Process Outsourcing) சேவைக்கான அலுவலகம் வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, சேலம் பகுதியில் இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி ஹெச்சில் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் சமீபத்தில் சேலம் ELCOT SEZ ஐடி பார்க்கை நேரில் பார்வையிட்டு உள்ளனர். இதன் அடிப்படையில், அங்கு பிபிஓ சேவை மையம் அமைக்கப்படுவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுவரை, HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்திடமிருந்தோ அல்லது ELCOT SEZ நிர்வாகத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்தியாவில் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் தற்போது பெரு நகரங்களைத் தாண்டி சிறு நகரங்களுக்குப் படையெடுத்து வருகிறது. சிறிய நகரங்களில் ரியல் எஸ்டேட் செலவுகள் குறைவாக இருப்பதைத் தாண்டி அதிகப்படியான திறன் வாய்ந்த ஊழியர்கள் இருக்கின்றனர்.
சின்ன கல்லு, பெத்த லாபம் என்பது போல் இந்திய ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு ஐடி, டெக் சேவை, பிபிஓ நிறுவனங்களும் தற்போது சிறு நகரங்களுக்குப் படையெடுத்து வருகின்றன. கோயம்புத்தூர் ஐடி நகரமாக மாறி வரும் வேளையில் தற்போது சேலம் மாவட்டமும் இதன் வரிசையில் வளர்ந்து வருகிறது.
சொல்லப்போனால் சேலத்தின் திறன் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை, திறன் வாய்ந்த பணியாளர்கள் முதல் போக்குவரத்து, நிதி ஆதாரம், இடம், நீர் என பல சாதகமான வாய்ப்புகள் இருந்தும் சேலத்திற்குப் பெரிய முதலீடுகள் வருவதில்லை. ஹெச்சிஎல் வருகை மூலம் சேலம் மாவட்டத்தின் வளர்ச்சி வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
HCL டெக்னாலஜிஸ் நிறுவனம்: HCL டெக்னாலஜிஸ் நிறுவனம், ஐடி துறையில் அசத்தி வரும் வேளையில் தற்போது செயற்கை அறிவு (Artificial Intelligence) மற்றும் செமிகண்டக்டர் துறையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிறுவனம், பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பிபிஓ சேவைகளை வழங்கி வருகிறது.
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பிபிஓ சேவை மையம் சேலத்தில் அமைக்கப்படுவதன் மூலம், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்து, சேலம் பகுதியின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
தகவல் தொழில்நுட்ப துறையில் சேலத்தின் பங்கு மிகவும் குறைவாக இருக்கும் வேளையில் ஹெச்சிஎல்-ன் வருகை பல பெரிய நிறுவனங்களை ஈர்க்க வழி வகுக்கும். இதன் மூலம் சேலத்தின் ஐடி சேவைத் துறையின் பங்கீடு அதிகரிக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications