தமிழ்நாட்டின் இதயப் பகுதியில் அமைந்துள்ள சேலம் மாநகரத்துக்கு நீண்ட வரலாற்று பெருமையும், கலாசார பாரம்பரியமும், தொழில் பின்னணிப் பெருமையும் உள்ளது.
ஸ்டீல் சிட்டி என்றும் மேங்கோ சிட்டி என்றும் பெருமிதத்துடன் சேலம் அழைக்கப்படுகிறது. சேலத்தில் விளையும் மல்கோவா மாம்பழம் உலகப் புகழ் பெற்றது.

வரலாற்றுப் பின்னணி: 17 ஆவது நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் சேலம் ஆளப்பட்டது. அதன் பின்னர் மராத்தியர்கள் பின்னர் பிரிட்டிஷாரால் சேலம் ஆட்சி செய்யப்பட்டது. அதன் தொன்மையான கோட்டை இன்றைக்கும் கம்பீரமாக வீற்றிருக்கிறது. கோட்டையின் உயர்ந்த சுற்றுச்சுவர்கள் இன்றைக்கும் வரலாற்று எச்சங்களாக ஓங்கி உயர்ந்து உள்ளன.
கைலாசநாதர் கோயில்: சேலத்தில் உள்ள பழமையான கோயில்களுள் இந்த கைலாசநாதர் கோயிலும் ஒன்றாகும். 8 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் மூலவராக சிவபெருமான் உள்ளார். இந்தக் கோயில் திராவிடக் கட்டடக் கலைக்கு ஒரு அத்தாட்சியாகும்.
தொழில் மையம்: முன்பு குறிப்பிட்டப்படி சேலம் மாநகரமானது ஸ்டீல் சிட்டி அல்லது எஃகு நகரம் என்று பெருமிதத்துடன் அழைக்கப்படுகிறது. சேலத்தில் ஸ்டீல் ஆலைகளும் பவுண்டரிகளும் உள்ளன. இவற்றில் ஸ்டீல் பார்கள், ராடுகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே மிக நவீனமான எஃகு உற்பத்தி ஆலை சேலத்தில் உள்ளது. ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்டின் ஆலை இது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஆலை முக்கியப் பங்கு வகிக்கிறது.
மாம்பழ சாகுபடி: தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் என்ற பெருமையை சேலம் கொண்டுள்ளது. இங்கு அல்போன்ஸா, பங்கனப்பள்ளி, தோத்தபுரி போன்ற இந்தியாவின் சிறந்த மாம்பழ ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் மல்கோவா மாம்பழம் தான் உலகப் பிரசித்தி பெற்றுள்ளது.
சேலம் மாம்பழ சந்தை தென்னிந்தியாவின் மிகப் பெரிய மொத்த வியாபார சந்தையாகும். இங்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த மாம்பழங்களை கொண்டு வந்து விற்கின்றனர். சேலத்து மாம்பழம் அதன் தனிச்சுவைக்குப் பெயர் போனது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இங்கு மாம்பழ விற்பனை களைகட்டும். நகரெங்கும் திருவிழாக் கொண்டது போல காட்சியளிக்கும்.
கலாசார பாரம்பரியம்: சேலம் மாநகரத்தில் பல்வேறு பாரம்பரியமிக்க திருவிழாக்கள் நடைபெறும். மழைக்கு அதிபதியான மாரியம்மனுக்கு இங்கு சிறப்பு வாய்ந்த கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து மாரியம்மனை தரிசித்து செல்வார்கள்.
தெப்பத்திருவிழாவின் போது அந்தக் குளத்தின் சுற்றுச்சுவர்கள் முழுவதும் வண்ண வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு ஜெகஜ்ஜோதியாகக் காட்சியளிக்கும். தெப்பத் திருவிழாவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து பரவசமடைவார்கள். இதற்கடுத்ததாக கோட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம் மிகவும் பிரபலமானதாகும். தேரோட்டத்தின் போது மாரியம்மன் திருவுருவச் சிலையானது அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்பட்டு ஊர்வலம் வரும்.
இயற்கைச் சூழல்: சேலத்தின் இயற்கை எழிலுக்கு சாட்சியாக ஏற்காடு மலை உள்ளது. சேலத்தில் அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் இந்த கோடை வாசஸ்தலம் அமைந்துள்ளது. ஏற்காடு மலையில் இயற்கை எழில் கொஞ்சும் குன்றுகளும், இதமான சீதோஷ்ண நிலையும், கண்கவர் ஏரியும் உள்ளது.
இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்காடு மலை ஒரு புகலிடமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் மகிழ்வதற்கு டிரெக்கிங், போட்டிங் போன்ற வசதிகளும் உள்ளன.
பட்டு பண்ணைகள்: சேலத்தில் சிறப்பான மல்பெர்ரி பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தலைசிறந்த நெசவாளர்களால் பட்டு துணிகள் தயாரிக்கப்படுகின்றன.
தரமான பட்டு சேலைகளும், ஆடைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மாம்பழம், எஃகு, பட்டு, பாரம்பரிய கோயில்கள், கோட்டைகள் என தமிழ்நாட்டின் பெருமைமிகு நகரமாக சேலம் விளங்குகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications