சேலம் மாவட்டத்தின் மிக முக்கியமான தொழிற்சாலையும், அடையாளமுமாக விளங்கும் சேலம் ஸ்டீல் பிளான்ட் தனியார்மயமாக்கல் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு உள்ளது. கொங்கு மண்டலத்தில் மிகவும் முக்கிய வர்த்தகப் பகுதியாகவும், வருவாய் ஈட்டும் பகுதியாகவும் இருக்கும் சேலம் மாவட்டத்தில் பல மத்திய அரசு நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இதில் முக்கியமான ஒன்று ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்-ன் கிளையான சேலம் ஸ்டீல் பிளான்ட்-ஐ மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யத் திட்டமிட்ட நிலையில், இதை வாங்குவோர் மத்தியில் விருப்பம் இல்லாத காரணத்தால் தனியார்மயமாக்கல் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு உள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சேலம் ஸ்டீல் பிளான்ட் வாங்குவதற்குப் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏலத்தில் பங்குபெற விருப்ப விண்ணப்பம் பெறப்பட்டு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பத்தைத் தேர்வும் செய்துள்ளது.
ஆனால் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்டத்திற்குச் செல்ல விருப்பம் காட்டாத நிலையில் தற்போது தனியார்மயமாக்கல் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு அரசு சொத்துக்களின் பயன்பாட்டை அதிகரித்த சில சொத்துக்களைத் தனியார்மயமாக்கல் பணிகளை மேற்கொண்டது, இதில் சேலம் ஸ்டீல் பிளான்ட்-ஐ விற்பனை செய்ய CCEA அமைப்பு ஒப்புதல் அளித்தது.
சேலம் ஸ்டீல் பிளான்ட் பல வகையாக ஸ்டீல் பொருட்களைத் தயாரித்து வருகிறது. ஒரு வருடத்திற்கு 70000 டன் கோல்டு ரோலிங் மில் மற்றும் 3,64,000 ஹாட் ரோலிங் மில் உற்பத்தித் திறன் கொண்டு உள்ளது. மேலும் வருடத்திற்கு 1,80,000 டன் ஸ்டீல் ஸ்லாப் தயாரிக்கும் தளமும் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications