சேலத்துக்கு கிடைத்த பொக்கிஷம்.. ரெடியானது நியோ டைடல் பார்க்.. விரைவில் திறப்பு..!

சேலம்: தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் டைடல் பார்க் (TIDEL Park) திட்டம், இப்போது சேலத்திலும் கால் பதிக்கிறது. சேலம் மாநகருக்கு அருகில் இருக்கும் கருப்பூரில் அமைக்கப்பட்டு வரும் நியோ டைடல் பார்க் (TIDEL Neo Park) கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. இதன் மூலம், சேலத்தின் ஐடி துறையின் வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் பிறக்கப்போகிறது.

மேலும் சேலம் ELCOT சிறப்பு பொருளாதார பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த நியோ டைடல் பார்க் புகைப்படம் வெளியாகி, இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சேலத்துக்கு கிடைத்த பொக்கிஷம்.. ரெடியானது நியோ டைடல் பார்க்.. விரைவில் திறப்பு..!


டைடல் நியோ பார்க் என்றால் என்ன?: TIDEL என்பது TAMIL Nadu Information Technology Development Corporation என்பதன் சுருக்கம் தான். TIDEL தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறை மேம்பாட்டுக்கான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் பெரிய அளவிலான ஐடி பூங்காக்களை (IT Parks) அமைத்து வருகிறது.

இந்த ஐடி பூங்காக்களில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அலுவலகங்களை அமைத்துச் செயல்பட உலகம் தரம் வாய்ந்த கட்டமைப்புகள் உடன் உருவாக்கப்பட்டுள்ளன. நியோ டைடல் பார்க் என்பது, டைடல் பார்க்கின் சிறிய வடிவமாகும். ஆரம்ப கட்ட ஐடி நிறுவனங்கள் செயல்படுவதற்கு வேண்டிய வசதிகளைக் கொண்ட பூங்காக்கள் "டைடல் நியோ பார்க்" என்று அழைக்கப்படுகின்றன.

டைடல் நியோ பார்க் என்பது 50000 சதுரடி முதல் 1 லட்சம் சதுரடி வரையிலான இடத்தில் அமைக்கப்படுபவை.

சேலத்துக்கு கிடைத்த பொக்கிஷம்.. ரெடியானது நியோ டைடல் பார்க்.. விரைவில் திறப்பு..!

தமிழ்நாட்டில் டைடல் பார்க் ஐடி துறையின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும், இதை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லும் திட்டத்தின் முதல் பகுதியாக நியோ-டைடல் பூங்கா திட்டத்தைத் தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக 7 மாவட்டத்தின் தலைநகரில் நியோ டைடல் பார்க் அமைக்கப்பட்ட உத்தரவிடப்பட்டது.

இதன் வாயிலாக விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் ஆகிய பகுதிகளில் நியோ டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சேலம் நியோ டைடல் பார்க்-ன் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது.

சிறிய நகரங்களில் பெரிய அளவிலான டைடல் பார்க் அமைப்பது என்பது பலன் அளிக்காமல் போக வாய்ப்பு உள்ளது, இதேவேளையில் சிறிய நகரங்களில் இருக்கும் வாய்ப்புகளை இழக்க கூடாது என்பதற்காகச் சிறிய அளவிலான டைடல் பார்க்குகளை அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது.

இந்த சிறிய வகை டைடல் பார்க்குகள் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்கள் இல்லாமல் சிறிய நகரங்களுக்குக் கொண்டு சென்று, அதன் மூலம் ஐடி சேவைத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்து இந்த நியோ டைடல் பார்க் திட்டத்தை அறிவித்தது. கடந்த பட்ஜெட் அறிக்கையில் ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுரடியில் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

டைடல் நியோ பார்க் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?: சேலம் நகரம் பாரம்பரிய தொழில்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் புகழ்பெற்றது. இருப்பினும், தகவல் தொழில்நுட்ப துறையில் பெரிய அளவிலான வளர்ச்சியைக் காணவில்லை. டைடல் நியோ பார்க் திறக்கப்படுவதன் மூலம், சேலத்தின் ஐடி துறையில் புதிய அத்தியாயம் தொடங்கும் என அனைத்து தரப்பினரும் நம்புகின்றனர்.

நியோ டைடல் பார்க்கில் ஐடி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கும்போது, சேலத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதன் பயனாக, இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே ஐடி துறையில் சிறந்த வாய்ப்புகளைப் பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+