டெக் துறையில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இன்றும் பணி நீக்கம் என்பது தொடர்ந்து வருகின்றது.
ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அதன் மொத்த ஐடி ஊழியர்களில் 10% பேரை பணி நீக்கம் செய்துள்ளன. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வரையில் இந்த பணி நீக்கமானது தொடர்ந்து கொண்டுள்ளது. இது மேற்கொண்டு ஐடி ஊழியர்கள் மத்தியில் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
7000 பணி நீக்கம்
அந்த வகையில் தற்போது சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் சுமார் 7000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்களில் சேல்ஸ்போர்ஸ்-ம் ஒன்று. இது அதன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 10% பேரை பணி நீக்கம் செய்துள்ளது.
மோசமான யோசனை
இது குறித்து சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, இதுபோன்று பணி நீக்கம் செய்வது மிக வருத்தத்தினை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனியோப், 2 மணி நேர காலில் 7000 பேரை பணி நீக்கம் செய்தது மோசமானதொரு யோசனை. விவரிக்க முடியாத ஒன்றை நாங்கள் விளக்க முயற்சித்தோம். இவ்வளவு பெரிய குழுவுடன் இதுபோன்றதொரு அழைப்பு என்பது கடினமான ஒன்று என்றும் கூறியுள்ளார்.
அதிக பணியமர்த்தல்
நிறுவனம் மொத்த பணியாளர்களில் 10% பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இது சுமார் 7000 பேர். இது தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் தான் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பெருந்தொற்று காலத்தில் நிறுவனம் அதிக நபர்களை பணியமர்த்தியது. ஆனால் தற்போது வருவாய் குறைந்துள்ளதால், பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
பெரிய நிறுவனங்களில் இயல்பு தான்
சேல்ஸ்போர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆயிரக்கணக்கான ஊழியர்களை விடுவிப்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாக இருந்தாலும், ஒரு பெரிய நிறுவனத்தில் இதுபோன்று நடப்பது இயல்பு என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நான் வாழ் நாள் முழுக்க வேலை வாய்ப்பை அளிக்க விரும்புகிறேன். ஆனால் உண்மை என்னவெனில் 80,000 ஊழியர்கள் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில், நீங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை சரி செய்ய வேண்டியிருக்கும்.
பணி நீக்க சம்பளம்
எங்கள் பணி நீக்க ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்பது தாராளமான ஒன்று. ஆக இது அவர்களுக்கு மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும். சேல்ஸ்போர்ஸ் மட்டும் அல்ல, பற்பல நிறுவனங்களும் பெரியளவில் பணி நீக்கம் செய்துள்ளன.
இதில் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும். இரண்டு நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இதற்கு சர்வதேச மந்த நிலையையே குற்றம் சாட்டின.
விசா மூலம் வந்த ஊழியர்கள் அதிகம் பாதிப்பு
இது மட்டும் அல்ல, ட்விட்டர், அமேசான், மெட்டா மற்றும் பல நிறுவனங்கள் பணி நீக்கத்தினை அறிவித்தன. இப்போது பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புதிய வேலைகளை தேடிக் கொள்ள சிரமப்படுகின்றனர். இது ஒரு கடினமான நேரம். குறிப்பாக பாதிக்கப்பட்ட ஊழியர்களில் ஹெ1 பி விசா ஊழியர்களும் அடங்குவர். அவர்களுக்கு புதிய வேலை தேடிக் கொள்ள 60 நாள் மட்டுமே உள்ளது. அப்படி 60 நாட்களுக்குள் அவர்கள் புதிய வேலை தேடிக் கொள்ளாவிட்டால், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications