உலகின் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்கள் ஒன்றாக சேல்ஸ் ஃபோர்ஸ் (Salesforce ) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அண்மைக்காலமாக மிகத் தீவிரமாக தங்களுடைய நிறுவனங்களில் ஏஐ ஏஜென்ட்டுகளை பணிக்கு அமர்த்தியது. மனிதர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு ஏஐ பணிக்கு அமர்த்தியது மிகப்பெரிய தவறு என தற்போது அந்த நிறுவனமே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது .
ஏஐ தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக பல்வேறு துறைகளிலும் தன்னுடைய ஆதிக்கத்தை பரப்பி வருகிறது. குறிப்பாக டெக் நிறுவனங்களில் ஏஐ ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கோடிங் உள்ளிட்ட வேலைகள் ஏஐ வசம் சென்று வருகின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான மனிதர்கள் வேலைவாய்ப்பினை இழந்து வருகிறார்கள் .

உலகின் மிகப்பெரிய எண்டர்பிரைஸ் சாஃப்ட்வேர் நிறுவனங்களுல் ஒன்றான சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனம் தங்களிடம் பணியாற்றிய 4000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக ஏஐ ஏஜெண்டுகளை பணிக்கு அமர்த்தியது. இது தற்போது அந்த நிறுவனத்திற்கே பெரிய தலைவலியாக மாறி இருக்கிறதாம்.
இந்த நிறுவனம் ஏஜெண்ட்ஃபோர்ஸ் என்ற தனிப்பிரிவை உருவாக்கி ஏஐ சாட்பாட்டுகள், ஏஐ ஏஜெண்டுகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கி தந்துள்ளது. ஆனால் இவை எதிர்பார்த்த செயல்திறனை காட்டவில்லையாம். சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனத்தின் ப்ராடக்ட் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த தலைவர் சஞ்சனா பரலேக்கர் ஓராண்டுக்கு முன்னர் இந்த பெரிய லாங்குவேஜ் மாடல்கள் மீது நாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருந்தோம் ஆனால் இப்போது அவை தவறாகிவிட்டன என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவன மூத்த தலைவர்கள் ஏஐ ஏஜென்டுகளை கொண்டு உண்மையான பிசினஸ் டாஸ்குகளை மேற்கொள்ளும் போது அதில் கிடைக்கக்கூடிய முடிவுகள் நம்பகத்தன்மையோடு இல்லை என கூறுகின்றன. அதிக வழிமுறைகளை கூறினால் ஏஐ ஏஜெண்டுகள் குழப்பமடைந்து செயல்திறனை குறைப்பதாக தெரிவிக்கிறார்கள்.
ஏஜென்ட் ஃபோர்ஸ் பிரிவுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரியான முரளிதர் கிருஷ்ண பிரசாத் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். ஒரு ஏஐ ஏஜெண்டிற்கு 8 வழிகாட்டுதல்களுக்கு மேல் நாம் கூறும் போது அது சில குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்ற தவறவிடுகிறது. துல்லியமான , சீரான தொழிலில் இருக்கக்கூடிய நிறுவனங்களுக்கு இதுபோன்ற நடத்தை தீவிரமான பிரச்சினைகளை உண்டாக்கும் என தெரிவித்திருக்கிறார் .
சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனம் உருவாக்கி தந்த ஏஐ சாட் பாட்டுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என வீட்டு பாதுகாப்பு நிறுவனமான விவிட் தெரிவித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடிய பிறகு ஒவ்வொரு கலந்துரையாடலுக்கு பின்னரும் அந்த கலந்துரையாடல் எப்படி இருந்தது என்பது குறித்த சர்வே அனுப்ப வேண்டும். ஆனால் ஏஐ ஏஜென்ட் அதனை செய்ய தவறுகின்றன என கூறி இருக்கிறது. மேலும் ஒரு வாடிக்கையாளர் ஒரு ஏஐ ஏஜென்டிடம் வித்தியாசமாக கேள்வி கேட்டால் பதில் அளிக்க முடியாமல் அதன் ஃபோகஸே மாறுகிறது என தெரிவித்துள்ளது.எனவே சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் மிக தீவிரமாக ஏஐ பயன்பாட்டை அமலுக்கு கொண்டு வருவதை குறைத்து தங்களின் லாங்குவேஜ் மாடல்களை மேம்படுத்தி வருகிறதாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications