நடிப்பு மற்றும் சினிமா தயாரிப்பு தவிர நடிகர் சல்மான் கான் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். ரியல் எஸ்டேட் அதில் ஒன்று. மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது கேலக்ஸி அபார்ட்மென்ட் தவிர பன்வெலில் ஒரு பண்ணை வீடு, கோராய் பீச்சில் ஒரு ஹாலிடே ஹோம், பாந்த்ரா, கார்ட்டர் ரோடு, வொர்லியில் அவருக்க ஏகப்பட்ட அபார்ட்மென்ட்கள் சொந்தமாக உள்ளன.
சல்மான் கானுக்கு துபாயில் உள்ள புர்ஜ் பசிபிக் கட்டடத்தில் ஒரு அபார்ட்மென்ட் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் அதை வாங்கினார். இப்போது பாந்த்ராவின் கார்ட்டர் ரோடில் அவரது தாயாருக்குச் சொந்தமான பிளாட்டில் 19 அடுக்கு மாடி குடியிருப்பைக் கட்டுவதற்கான அனுமதிக்காக சல்மான் காத்திருக்கிறார்.

இது எல்லாவற்றையும் விட சான்டா குரூஸ் லிங்க்கிங் ரோட்டில் உள்ள நான்கு மாடி கமர்ஷியல் பிளேஸ் அவருக்கு மாதந்தோறும் மிக அதிகமான வருமானத்தைப் பெற்றுத் தருகிறது. 2012 ஆம் ஆண்டில் சல்மான் கான் இந்த இடத்தை ரூ.120 கோடிக்கு வாங்கினார்.
25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மூலம் சல்மான் கானுக்கு மாதம் ரூ.90 லட்சம் வாடகை வருகிறது. இந்த இடம் முன்பு பியூச்சர் குரூப் வசம் இருந்தது. இப்போது அதன் வாடகை ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் வெர்சேஸ், என்டிசி சாக்லெட், ஒலிவியாலஜி போன்ற உணவு நிறுவனங்கள் வாடகைக்கு உள்ளன. இங்குள்ள நிறுவனங்களில் மசாபா குப்தா, முகுல் அகர்வால், பர்ப்பிள் ஸ்டைல் லேப்ஸ், சாங்கேத் பாரெக், ராகுல் கல்யாண், ஹர்மிந்தர் சாஹ்னி போன்ற பிரபலங்கள் 30 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளனர்.
சல்மான் கானிடம் உள்ள 9 முக்கிய வருவாய் ஆதாரங்களில் இருந்து வந்த வருமானம் மூலம் ரூ.2,907 கோடி நிகர சொத்து சேர்ந்துள்ளது.
இதுதவிர வெற்றிகரமான சினிமா தயாரிப்பு நிறுவனம், ஆடை தயாரிப்பு நிறுவனம், யாத்ரா.காம் போன்ற நிறைய ஸ்டார்ட்அப் கம்பெனிகளிலும் ஷார்ட் விடியோ பிளாட்பார்மான சிங்காரியிலும் சல்மான் கான் முதலீடு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications