செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நொடிக்கு நொடி வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒரு புறம் இது மனிதர்களின் வேலைகளை எளிமையாக்கினாலும் மறுபுறம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கின்றன.
ஏஐ பல்வேறு வேலைகளை மனிதர்களை விட வேகமாகவும் திறம்படவும் செய்கிறது என பல்வேறு டெக் நிறுவனங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தவும் தொடங்கி விட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை காரணமாக கூறி கூகுள் , அமேசான் என பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களில் ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்துள்ளன.

டெக் நிறுவனங்களை பொறுத்தவரையில் தற்போது ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு முதன்மையாக வைக்கக்கூடிய ஒரு காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக இருக்கிறது. ஆனால் இது உண்மை இல்லை என்கிறார் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன். தற்போது டெக் நிறுவனங்களில் நடைபெறக்கூடிய பணி நீக்கங்களுக்கு ஏஐ முழுமையான காரணம் அல்ல என கூறுகிறார்.
ஏஐ வருகையால் பணிநீக்கம் என நிறுவனங்கள் கூறுவது பொய் என சுட்டிக்காட்டும் அவர், டெக் நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு காரணமாக கூறி ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன இதனை AI Washing என அழைக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நிறுவனங்களுக்கு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க ஒரு காரணம் தேவை அதற்கு ஏஐ-ஐ பயன்படுத்துகிறார்கள் என கூறுகிறார்.
ஏஐ வளர்ந்து வருகிறது சில வேலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அது மட்டுமே ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு காரணம் இல்லை என தெரிவித்திருக்கிறார். கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஐடி துறையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள். நம்முடைய அன்றாட வேலைகளில் ஏஐ தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான். ஆனால் அது புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது என சாம் ஆல்ட்மேன் கூறுகிறார்.
ஒவ்வொரு முறை ஒரு புதிய தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் போதும் வேலை வாய்ப்பு சந்தையில் மாற்றங்கள் ஏற்படும் அத்தகைய ஒரு மாற்றம் தான் தற்போது நடைபெற்று வருகிறது என கூறுகிறார். ஆனால் மற்ற டெக் தலைவர்கள் வேறு பார்வையை முன் வைக்கின்றனர். ஆந்திராபிக் தலைமை செயல் அதிகாரி ஏஐ புதிய வேலைகளை உருவாக்காது ஆனால் லட்சக்கணக்கான வேலைகளை நிச்சயம் பறிக்கும் எனக் கூறியிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏஐ பிரிவு தலைவரும் அடுத்து 18 மாதங்களில் வைட் காலர் வேலைகள் அனைத்துமே பறிபோய்விடும் என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications