சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: சர்வதேச அளவில் நம்முடைய தகவல் தொடர்பு முறைகளையே முற்றிலும் மாற்றியமைத்தவைதான் ஃபோன்கள். முதலில் நாம் டெலிஃபோன்களை பயன்படுத்தினோம். பின்னாளில் அவை சின்ன சின்ன பட்டன் ஃபோன்களாக மாறின. தற்போது ஸ்மார்ட் ஃபோன்களை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகிறோம். ஒரு கணினியில் இருக்கும் அனைத்தையுமே நாம் போனிலேயே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் ஸ்மார்ட் ஃபோன்களில் இருக்கின்றன.
கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட் ஃபோன்களுக்கு மாற்றாக ஒரு கருவி வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த சாட் ஜிபிடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஒரு புதிய கருவியை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கருவி பயன்பாட்டுக்கு வந்தால் நாம் தற்போது பயன்படுத்தி வரும் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு வேலை இருக்காது என சொல்லப்படுகிறது. ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் தானும் இதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தில் வடிவமைப்பு தலைவராக செயல்பட்டு வந்த ஜானும் இணைந்து புதிதாக ஒரு கருவியை உருவாக்கி வருவதாக சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
இந்த கருவி பயன்பாட்டுக்கு வந்தால் செல்போன்கள் எப்படி நம்முடைய தகவல் தொடர்பு முறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்ததோ அதேபோன்ற ஒரு பெரிய மாற்றத்தை நாம் காண முடியும், குறிப்பாக செல்போன் பயன்பாட்டிற்கே தேவை இருக்காது எனக் கூறியுள்ளார். தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட கருவியாக அது இருக்கும் என சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
தற்போது படித்தவர்களால் மட்டுமே செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்த முடிகிறது. அப்படி இல்லாமல் அனைத்து தரப்பினரும் எளிமையாக பயன்படுத்தக்கூடிய வகையிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கருவியை வடிவமைத்து வருவதாக கூறியுள்ளார். சில ஆண்டுகளாகவே இந்த கருவியை வடிவமைத்து வருவதாக கூறும் அவர் அண்மையில் இதற்காக பல்வேறு தலைவர்களிடமிருந்து நிதி திரட்டி இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த புதிய கருவியானது பயனாளர்களின் குரல் கட்டளைக்கு ஏற்ப செயல்படும்.
இதனால் நாம் போன்களை போல டைப் செய்ய வேண்டியதோ அல்லது டச் பேடுகளையோ பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது. முழுக்க முழுக்க நம்முடைய குரல் கட்டளை மூலமே இதனை இயக்க முடியும் என கூறுகிறார்.
இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்களை நாம் எளிமையாக கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக படிப்பறிவு திறன் இல்லாதவர்கள் கூட இவற்றை எளிமையாக பயன்படுத்த முடியும் என்பதால் இது பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தில் ஜான், ஐபோன் மற்றும் பிற தயாரிப்புகளை வடிவமைத்தவர். எனவே அவருக்கு இதுபோன்ற கருவிகள் வடிவமைப்பில் பெரிய அளவில் அனுபவம் இருக்கிறது என்பதால் இவ்விருவரும் இணைந்து உருவாக்கக்கூடிய இந்த கருவி குறித்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளில் இதற்கான ப்ரோட்டோடைப் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போது நாம் பயன்படுத்தக்கூடிய செல்போன்களிலேயே பெரும் அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன சில செயலிகளில் நாம் குரல் கட்டளைகளை கூட பயன்படுத்தி வருகிறோம் வருங்காலத்தில் இந்த ஸ்மார்ட் போன்களையும் மிஞ்சும் வகையில் ஒரு கருவி வருகிறது என இவர் கூறியிருப்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications