வாஷிங்டன்: உலகம் முழுவதுமே ஏஐ தொழில்நுட்பம் குறித்துதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . ஏஐ தொழில்நுட்பம் நம்முடைய அன்றாட வேலைகளில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இந்த தொழில்நுட்பத்தின் வருகை மனிதர்களின் பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பறித்து வருவதையும் நாம் கண்டு வருகிறோம்.
நம்முடைய பணி இடங்களும் நம்முடைய பணிகளும் தினம்தோறும் ஏஐ அப்டேட்டுக்கு ஏற்ப மாற்றம் அடைந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் பல்வேறு வேலை வாய்ப்புகளும் குறிப்பாக ஒயிட் காலர் வேலைகள் ஏஐ தொழில்நுட்பத்தால் பறிக்கப்படும் என தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது. சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன் ஏஐ வருகையால் என்னென்ன வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எந்தெந்த வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை விவரமாக தெரிவித்து இருக்கிறார் .

பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி இருக்கும் சாம் ஆல்ட்மேன், ஏஐ வருகையால் எந்தெந்த வேலைகளுக்கெல்லாம் ஆபத்து என்பதை விவரமாக தெரிவித்திருக்கிறார். இதன் படி வழக்கமாக செய்யக்கூடிய கஸ்டமர் சப்போர்ட் வேலைகள் குறிப்பாக மொபைல் போன் மற்றும் கணினி ஆகியவற்றை கொண்டு மேற்கொள்ளப்படும் கஸ்டமர் சப்போர்ட் சார்ந்த வேலைகளுக்கு இனி மனிதர்கள் தேவைப்படமாட்டார்கள் என கூறியிருக்கிறார் .
இந்த வேலைகள் முழுவதுமாக ஏஐ வசம் சென்று விடும் எனக் கூறியிருக்கும் அவர் தானியங்கி முறையில் ஏஐ தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை வேகமாக வழங்குகிறது வாடிக்கையாளர் கேட்கக்கூடிய ஒரு கேள்விக்கு மனிதர்களை விட ஏஐ வேகமாக பதில் தருகிறது என்கிறார். எனவே நிச்சயம் இந்த வேலைக்கு உத்தரவாதம் கிடையாது எனக் கூறியிருக்கிறார்.
அடுத்ததாக சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் மற்றும் கோடிங் வேலைகள் பெரும்பாலும் ஏஐ வசம் சென்றுவிடும் என அவர் கூறுகிறார் . கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கோடிங் வேலைகளுக்கு ஏஐ பயன்படுத்த தொடங்கிவிட்டன என்பதால் இந்த துறையில் மனிதர்கள் எண்ணிக்கை குறைந்து ஏஐ படிப்படியாக ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கும் எனக் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் இந்த துறையில் முழுவதுமாக ஏஐ-ஆல் ஆக்கிரமிக்க முடியாது ஏனெனில் இதில் மனிதர்களின் தலையீடும் தேவை என்பதால் பெரும்பாலான கோடிங் வேலைகள் ஏஐ வசமும், அதனை சரி பார்க்கும் வேலைகள் மனிதர்களிடமும் இருக்கும் என கூறுகிறார் . அடுத்த 10 ஆண்டுகளில் இந்த துறை பெரிய மாற்றம் காணும் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் .
மனிதர்களோடு தொடர்புடைய உணர்வுகளோடு தொடர்புடைய வேலைகளுக்கு தொடர்ந்து மனிதர்கள் தேவை இருக்கும் அதனை ஒருநாளும் ஏஐ-ஆல் தொட முடியாது எனக் கூறியிருக்கிறார். இதற்கு உதாரணமாக அவர் கூறுவது நர்சிங் வேலை .அதாவது ஒரு நோயாளியுடனும் ஒரு மனிதருடனும் உணர்வு ரீதியாக தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் இருக்கக்கூடிய வேலைகள் ஏஐ வசம் செல்லவே முடியாது என்கிறார்.
நோய்வாய்பட்ட மனிதன் மற்றொரு மனிதனிடம் தான் ஆறுதல் தேட முடியும், மனிதர்களால் அதனை உணர்ந்து செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார். Creativity, judgement, human empathy ஆகிய மூன்றும் அடிப்படையாகக் கொண்டு செயல்படக்கூடிய வேலைகளுக்கு ஏஐ தொழில்நுட்பத்தால் எந்த தொந்தரவும் இல்லை ஏனெனில் இந்த வேலைகளை மனிதர்களால் மட்டுமே செய்ய முடியும் மற்றபடி கணினி மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை அடிப்படையாக மேற்கொள்ளும் வேலைகள் அனைத்தையும் ஏஐ பறித்துக் கொள்ளும் என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications