ChatGPT அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Open AI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி அவர், "தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இது தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளார்.
அதாவது, ஏஐ வளர்ச்சியின் காரணமாக, மிகவும் சுலபமாக போலி வீடியோ, ஆடியோ அல்லது புகைப்படங்கள் உருவாக்க முடிகிறது. இது சில சமயங்களில் உண்மையான நபர்கள் போன்றே தோறும். யார் நம்மை அழைக்கிறார்கள்.. யாரிடம் நாம் பேசுகிறோம் என்பதையே நம்ப முடியாத நிலைக்கு நாம் செல்லக் கூடும் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்ற விஷயங்கள் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே, ஏஐ வளர்ச்சியுடன் இணைந்து, அதனைத் தவறாக பயன்படுத்தும் முயற்சிகளையும் கட்டுப்படுத்த அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இப்போதும் சில நிதி நிறுவனங்கள், நீங்கள் ஒரு 'challenge phrase' சொன்னால், அதை உண்மை என்று நம்பி பணம் அனுப்ப அனுமதிக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது ஆகும். இன்றைய ஏஐ தொழில்நுட்பத்தால், குரல் அடையாளங்களை சுலபமாக நகலெடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று எச்சரித்துள்ளர். அதாவது, ஏஐ தொழில்நுட்பம் மூலம் யாருடைய குரலையும் மிக தெளிவாக நகலெடுக்க முடியும். தற்போதைய பாதுகாப்பு முறைகளில், பாஸ்வோர்ட் மட்டும் தான் சற்று பாதுகாப்பாக உள்ளது. எனவே, நிதி நிறுவனங்கள் பாதுகாப்பு முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் என்றும் சாம் ஆல்ட்மன் கூறியுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவின் மத்திய வங்கி (Federal Reserve) நடத்திய நிகழ்வில் பேசிய சி.இ.ஓ. சாம் ஆல்ட்மன், "ஏ.ஐ தொழில்நுட்பம், உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. நிதி நிறுவனங்கள், பாதுகாப்பு முறைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஏஐ பழைய முறைகளை முற்றிலுமாக தோற்கடித்து விட்டது. வேலைவாய்ப்பு நிலை, மனித திறன்கள், தொழிலாளர்களின் பங்களிப்பு ஆகியவை மாற்றமடையப் போகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் முதல் அலுவலகம் : இதற்கிடையே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் Open AI நிறுவனம் வாஷிங்டனில் தனது முதல் அலுவலகத்தைத் திறக்கவுள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 30 பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது. இதில், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஏ.ஐ குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். ஏ.ஐ-யின் பொருளாதார தாக்கங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஏ.ஐ தொழில்நுட்பத்தை அனைவருக்கும் சமமாக அணுகக்கூடிய வகையில் மேம்படுத்தப்படும்.
ஏஐ குறித்த ஆபத்துக்களை சி.இ.ஓ.சாம் ஆல்ட்மன் எச்சரித்த நிலையிலும், ஓபன் ஏஐ மீது அதிக கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்று அதிபர் டிரம்ப் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, வெளிநாட்டு ஏ.ஐ போட்டியாளர்களுடன் போட்டி போட வேண்டிய சூழ்நிலையில் உள்ளதால், கடுமையான சட்டங்கள் உள்ளூர் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுக்கக்கூடும் என்று ஓபன் ஏ.ஐ. நிறுவனம் கூறியுள்ளது.
Open AI சி.இ.ஓ. சாம் ஆல்ட்மன் கூறுகையில், "ஏஐ தொழில்நுட்பம் வேலைவாய்ப்பை முற்றிலும் அழிக்கும் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இது அந்தளவுக்கு கவலையளிக்கக் கூடிய விஷயம் அல்ல. ஏஐ-யால் வேலைகள் குறையும் என்பதற்கும், புதிதாக வேலைகள் உருவாகும் என்பதற்கும் இடையே எவ்வாறு சமநிலை உருவாகும் என்பதை நேரடியாக கணிக்க முடியாது.
ஆனால், இனிமேல் முழு வேலை வகுப்புகள் அழிந்துவிடும். அதே நேரத்தில் புதிதாக வேலை வகைகள் உருவாகும். மேலும், உங்களுக்குத் தேவையான அனைத்தும் இருக்கும். ஆனால், உங்களால் எதையும் செய்ய வேண்டிய தேவை இருக்காது. அதாவது, எதிர்காலத்தில் வேலை என்ற அமைப்பே ஒரு "நிகழ்வுப் பயணமாக" மாறியிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications