உலகமே வியந்து பார்த்து நிற்கும் ஓப்பன்ஏஐ நிறுவனம் சல்லி சல்லியா நொருங்கும் நிலையில், இதன் நிறுவனர் சாம் ஆல்ட்மேன் எவ்விதமான கவலையும் இல்லாமல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலையை வாங்கிக்கொண்டு தனது அடுத்த இலக்குகளை நோக்கி நகர துவங்கியுள்ளார்.
ஓப்பன்ஏஜ நிறுவனத்தின் கீழ் தற்போது ChatGPT, DALL·E, OpenAI Five, OpenAI Codex ஆகிய சேவைகள் டெக் துறையை ஆட்டிப்படைத்து வரும் வேளையில், இதன் செயல்திறனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்குடன் ஏஜ தொழில்நுட்பத்திற்கான சிப்-ஐ தயாரிக்கும் புதிய நிறுவனத்திற்கு முதலீட்டை திரட்டும் பணியில் இறங்கியுள்ளார்.

சாம் ஆல்ட்மேன் Tigris என்ற ரகசிய பெயருடன் துவங்கியுள்ள புதிய ஏஐ சிப் நிறுவனத்திற்கு முதலீட்டை திரட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்களிடம் முதலீட்டை திரட்டும் பணியில் ஈடுப்பட்டு உள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்திற்காக பிரத்தியேக சிப் தற்போதைய வர்த்தக சந்தையில் அதிகம் தேவைப்படுகிறது, தற்போது அனைத்து நிறுவனங்களும் தனது ஏஐ சேவைகளை என்விடியா-வின் கேமிங் சிப் வைத்து தான் செயல்படுத்தி வருகிறது. இப்படியிருக்கையில் ஏஐ தொழில்நுட்பத்திற்காக பிரத்தியேக சிப் செயற்கை நுண்ணறிவு துறையில் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.
செயற்கை நுண்ணறிவுக்கான ஏஐ சிப் தயாரிப்பில் பிற நிறுவனங்கள் முந்துவதற்குள் மென்பொருள் பிரிவில் பெரும் ஆதிக்கம் செய்யும் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். Tigris மட்டும் பயன்பாட்டுக்கு வந்தால் Nvidia பெரும் வர்த்தக பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
சாம் ஆல்ட்மேனின் Tigris திட்டத்தை ஆப்பிள் நிறுவனத்தின் டிசைன் நிறுவனத்தின் தலைவரான Jony Ive உடன் இணைந்து துவங்குகிறார். இதற்காக சாப்ட்பேங்க், சவுதி அரேபியாவின் PIF, முபாதலா இன்வெஸ்ட்மென்ட்ஸ் இன்னும் பல முதலீட்டாளர்களுடன் சாம் ஆல்ட்மேன் பேசி வருகிறார்.
பல பில்லியன் டாலர் முதலீட்டை சீட் ஃபண்டிங் ஆக கொண்டு துவக்கும் Tigris திட்டம் நினைத்த படி சாம் ஆல்ட்மேன் தான் AI துறையில் வன்பொருள், மென்பொருள் ஆகியவற்றில் கிங். எல்லாம் சரி இதிலும் சத்ய நாடெல்லா-வின் மைக்ரோசாப்ட் இருக்குமா..? ஒருப்பக்கம் ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் ரணகளம் ஆகி வரும் வேளையில் ஸ்ட்ரிக்ட்டாக தனது இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறார் சாம் ஆல்ட்மேன்.


Click it and Unblock the Notifications