கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை சரியாக முடிவெடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ரியல் எஸ்டேட்டில் சினிமா பிரபலங்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதில் ஆலியா பட், கார்த்திக் ஆர்யன், சமந்தா ருத் பிரபு குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
நடிகர் அஜய் தேவ்கன், மனோஜ் வாஜ்பாய், கஜோல் ஆகியோரும் கமர்ஷியல் ரியல் எஸ்டேட்டில் பெருமளவு முதலீட்டை செய்துள்ளனர்.
ரியல் எஸ்டேட்டில் இந்தாண்டு அதிக முதலீடு செய்த பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் பற்றி இனி பார்க்கலாம்.

ஆலியா பட்: ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள நடிகை ஆலியா பட் அங்கு கலக்கி வருகிறார். 30 வயதான ஆலியா பட் ரூ.45.48 கோடி மதிப்பிலான 3 சொத்துகளை வாங்கியுள்ளார். இதில் ஒன்றை தனது சகோதரிக்கு தாராள மனதோடு பரிசாக அளித்துள்ளார் ஆலியா பட்.
பிரீத்தி ஜிந்தா-
2023 அக்டோபர் மாதத்தில் மும்பையின் பாலி ஹில்லில் ஒரு சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார். 1,474 சதுர அடி கொண்ட இந்த பங்களா ரூ.17.01 கோடி ஆகும்.
கஜோல்: டிஜிட்டல் எண்டர்டெயின்மென்ட்டில் வெற்றிகரமாக உலா வரும் நடிகை கஜோல் ஜுஹூவில் ரூ.16.50 கோடிக்கு ஒரு பிரீமியம் அப்பார்ட்மென்டை வாங்கியுள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கஜோல் ஜுஹூவில் இரண்டு அப்பார்ட்மென்ட்களை சொந்தமாக வைத்துள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா: நடிகை சோனாக்ஷி சின்ஹா பாந்த்ராவில் ஒரு பிரீமியம் வீட்டை வாங்கியுள்ளார். 26 ஆவது மாடியில் அமைந்துள்ள இந்த வீட்டின் மதிப்பு ரூ.11 கோடி ஆகும்.
கார்த்திக் ஆர்யன்: பூல் புலையா 2 ஸ்டார் கார்த்திக் ஆர்யன் தான் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் இருந்து மாறி சொந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த வீட்டின் மதிப்பு ரூ.17.50 கோடி ஆகும்.
சமந்தா ருத் பிரபு: வருண் தவானுடன் புதிய படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை சமந்தா ருத் பிரபு மும்பை புறநகர் பகுதியில் ஒரு வீடு வாங்கியுள்ளார். மூன்று பெட்ரூம் கொண்ட அந்த.வீட்டின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.
அனன்யா பாண்டே: தாந்தேராஸ் பண்டியன்று நடிகை அனன்யா பாண்டே தனது முதல் வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீட்டை டிசைனர் கௌரி கான் வடிவமைத்துள்ளார்.
தினேஷ் விஜன்: மேட்டாக் பிலிம்ஸ் நிறுவனர் தினேஷ் விஜன் ரூ.103 கோடிக்கு பாலி ஹில்லில் ஒரு டூப்ளக்ஸ் வீடு வாங்கியுள்ளார். 7800 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீடு இரண்டடுக்கு கொண்டுள்ளது.
மனோஜ் வாஜ்பாய்: மனோஜ் வாஜ்பாயும் அவரது மனைவியும் ரியல் எஸ்டேட் பிசினசில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தேரியில் உள்ள பிரபல கட்டடத்தில் 4 அலுவலகங்களை மனோஜ் வாஜ்பாய் வாங்கியுள்ளார்.
அஜய் தேவ்கன்: டிகர் அஜய் தேவ்கன்னும் ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபட்டு வருகிறார். அவர் ரூ.45.09 கோடிக்கு தனது ஐந்து அலுவலகக் கட்டடங்களை வாங்கினார். அவரது மனைவி நடிகை கஜோல் அதே கட்டடத்தில் 8ஆவது மாடியில் ஒரு அலுவலகத்தை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications