பிரபல அரோமாதெரபி பிராண்டுக்கு இணை நிறுவனரான சமந்தா! என்ன பிராண்ட் தெரியுமா?

சீக்ரெட் அல்கெமிஸ்ட் என்ற அரோமாதெரபி அடிப்படையிலான நிறுவனம் நடிகை சமந்தா பிரபுவை இணை நிறுவனராக நியமித்துள்ளது. குருகிராமில் உள்ள ஏஞ்சல் முதலீட்டு நிறுவனமான இன்ஃப்ளெக்ஷன் பாயின்ட் வென்ச்சர்ஸ் தலைமையில் சீக்ரெட் அல்கெமிஸ்ட் நிறுவனம் $500,000 நிதி திரட்டியது. நிறுவனத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஒரு பகுதியாக இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.

சீக்ரெட் அல்கெமிஸ்ட், அத்தியாவசிய எண்ணெய்கள், கிரீம்கள், பாடி மிஸ்ட் மற்றும் ஷவர் ஜெல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளின் மூலம் அரோமாதெரபியை வழங்குகிறது. தற்போது திரட்டப்பட்ட நிதியின் மூலம், நிறுவனத்தை மேம்படுத்தவும், பண்டிகைக் கால தயாரிப்பிற்காக சரக்குகளை அதிகரிக்கவும், நிறுவனத்தின் குழுக்களை விரிவுபடுத்தவும் அல்கெமிஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 பிரபல அரோமாதெரபி பிராண்டுக்கு இணை நிறுவனரான சமந்தா! என்ன பிராண்ட் தெரியுமா?

அங்கிதா தடானி மற்றும் ஆகாஷ் வாலியா ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட அல்கெமிஸ்ட் பிராண்ட், பர்சனல் கேர் ப்ராடக்டுகளை இயற்கை முறையில் மக்களுக்கு வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது சமந்தா பிரபுவின் நுழைவின் மூலம் தென்னிந்தியாவில் இந்த பிராண்டை விரிவுபடுத்தும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

"1990-ஆம் ஆண்டுகளில் அழகு சாதனப் பொருட்களின் பிரிவு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது. இது துரதிஷ்டவசமாக சில தரம் குறைந்த பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்த்தது. சீக்ரெட் அல்கெமிஸ்ட் மலிவு விலையிலான பர்சனல் கேர் ப்ராடக்டுகளை வழங்க உள்ளது. மேலும் தங்களின் நிலையான வளர்ச்சியை அதிகரிக்க உள்ளது", என்று இன்பர்மேஷன் பாயிண்ட் வென்ச்சர்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினய் பன்சால் கூறியுள்ளார்.

ஆயுர்வேத நடைமுறைகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களை மையமாகக் கொண்டு, இந்த ஸ்டார்ட்அப், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற நவீன வாழ்க்கை முறை நோய்களைத் தீர்க்க புதுமையான தயாரிப்புகளை வழங்குகிறது.

"நான் என் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற போது அரோமாதெரபி எனக்கு எதிர்பாராத ஆறுதலை தந்தது. மக்களுக்கு நல்வாழ்வை கொண்டு வர அத்தியாவசிய எண்ணைகளின் சக்தியை நான் உணர்ந்தேன். நான் திரும்பி வந்ததும் இங்கு நம்பகமான ஒரு பிராண்டைத் தேட ஆரம்பித்தேன். சீக்ரெட் அல்கெமிஸ்ட் பிராண்ட் என் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது", என்று தற்போது இணை நிறுவனராக நியமிக்கப்பட்டிருக்கும் சமந்தா பிரபு கூறியுள்ளார்.

இந்தியாவில் அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு சந்தையின் மதிப்பு $31.5 பில்லியன் ஆகும், இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. 2.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள D2C உடல் பராமரிப்புப் பிரிவு வேகமாக விரிவடைந்து வருகிறது. சீக்ரெட் அல்கெமிஸ்ட், இயற்கை மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட தயாரிப்புகளைத் தேடும் நுகர்வோரை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+