8 மாதங்களில் ரூ.120 கோடி வருமானம்: நடிப்பை தாண்டி நடிகை சமந்தாவுக்கு அடித்த ஜாக்பாட்..!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நடிப்பதை தாண்டி தொழில் முதலீடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் ஒரு தொழிலை தொடங்கி 8 மாதங்களிலேயே 120 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளார்.

சமந்தா இணை-நிறுவனராக உள்ள சீக்ரெட் அல்கெமிஸ்ட் (Secret Alchemist) என்ற வாசனை திரவிய பிராண்ட், வெறும் 8 மாதங்களுக்குள் 120 கோடி ரூபாய் வருவாய் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. நடிகை சமந்தா தனது உடல்நல பிரச்சனை ஏற்பட்ட போது, தான் பயன்படுத்தும் சாதாரண அழகு சாதன பொருட்கள் மற்றும் நறுமண பொருட்களில் பல்வேறு இரசாயனங்கள் கலந்திருப்பதை உணர்ந்துள்ளார். இதனால் இரண்டு ஆண்டுகள் நறுமண பொருட்களை பயன்படுத்துவதையே அவர் முழுமையாக தவிர்த்துள்ளார்.

8 மாதங்களில் ரூ.120 கோடி வருமானம்: நடிப்பை தாண்டி நடிகை சமந்தாவுக்கு அடித்த ஜாக்பாட்..!!

பின்னர், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத, இயற்கையான மற்றும் சுத்தமான நறுமண பொருட்களை தேடியபோது உருவானதே இந்த 'சீக்ரெட் அல்கெமிஸ்ட்' பிராண்ட். அங்கிதா ததானி மற்றும் ஆகாஷ் வாலியா ஆகியோருடன் இணைந்து சமந்தா இந்த பிராண்டை தொடங்கினார். இது அவருக்கு எதிர்பாராத வருமானத்தை தந்துள்ளது. மதுரை மல்லி, வெண்ணிலா பல ஃபிளேவர்களில் இவரது நிறுவனம் வாசனை திரவியம் விற்கிறது.

Also Read

வழக்கமான நறுமண பொருட்களில் இவ்வளவு இரசாயனங்கள் இருப்பது எனக்கு தெரியாது. தாய்மார்கள் ஏன் தங்கள் பச்சிளம் குழந்தைகள் அருகில் பெர்ஃபியூம்களை பயன்படுத்துவதில்லை என்பதை இப்போது புரிந்துகொள்கிறேன் என சமந்தா கூறியுள்ளார். இந்த வணிக வெற்றியை குறித்து பேசிய சமந்தா, தொழில்முனைவோர் வாழ்க்கையில் ஆரம்பக் காலத்தில் தான் மேற்கொண்ட முதலீடுகள் மற்றும் கூட்டுமுயற்சிகள் தோல்வியடைந்ததாகவும், அந்த தோல்விகள்தான் தனக்கு மிகப்பெரிய அனுபவத்தையும் பாடத்தையும் கற்றுக்கொடுத்தன என்றும் தெரிவித்தார்.

Recommended For You

வெற்றியை விட தோல்விகள்தான் என் வாழ்க்கையை வடிவமைத்துள்ளன; வெற்றிகள் எனக்கு எதையும் பெரிதாக கற்றுக்கொடுக்கவில்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது கர்ப்பமாக உள்ள சமந்தா விரைவில் குழந்தை பெற்றெடுக்க உள்ளார். தொழில் முதலீட்டில் 120 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ள அவர், திரையிலும் சிறந்த லாபம் பார்த்துள்ளார்.

அண்மையில் அவர் தயாரித்து நடித்த மா இண்டி பங்காரம் திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரைப்படங்களிலும் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ள சமந்தா விடா முயற்சியுடன் தொழில் முதலீடுகளையும் மேற்கொண்டு பலருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+