நடிகை சமந்தா டிசம்பர் 1ஆம் தேதி அன்று பிரபல இயக்குனர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டார் . தென்னிந்திய உலகின் முன்னணி நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்தார்.
சமந்தாவும் - நாக சைதன்யாவும் நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர் , ஆனால் மணமுறிவு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். நாக சைதன்யா நடிகை சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை சமந்தாவும் தி பேமிலி மேன் இயக்குநர் ராஜ் நிடிமொருவை டிசம்பர் 1ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார்.

சமந்தாவின் இரண்டாவது திருமணம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் எளிமையான முறையில் சமந்தா மற்றும் ராஜின் திருமணம் நடைபெற்றது . மிக குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து இருந்தனர். ஈஷா யோகா மையத்தில் உள்ள கோயிலில் நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
இந்த புகைப்படங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது சமந்தா அணிந்திருந்த ஒரு மோதிரம் . வழக்கமாகவே பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் என்றாலே அவர்கள் அணியக்கூடிய ஆடைகள் அவர்கள் அணியக்கூடிய நகைகள் உள்ளிடவை கவனம் பெறும். அந்த வகையில் இந்த முறை சமந்தா தன்னுடைய கையில் அணிந்திருந்த மோதிரம் பெரிய அளவில் கவனம் பெற்று இருக்கிறது.

இந்த மோதிரம் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருப்பதே பலரும் இது குறித்து பேசுவதற்கு முக்கிய காரணம். இதனை portrait cut diamond என கூறுகின்றனர். பிரபலங்களின் நகைகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடும் பிரியான்சூ கோயல் என்பவர் சமந்தாவின் இந்த வைர மோதிரம் குறித்து விரிவாக ஆய்வு செய்து பதிவினை வெளியிட்டுள்ளார். திருமணத்தின் போது கோயிலிலேயே ராஜ் இந்த ஸ்பெஷல் மோதிரத்தை சமந்தாவுக்கு அணிவித்தார்.
Theodoros jeweller என்ற நிறுவனம் தான் இந்த ஸ்பெஷல் வைர மோதிரத்தை சமந்தாவின் ஸ்பெஷலான தருணத்திற்காகவே வடிவமைத்து தந்துள்ளது. portrait cut diamond ரக நகைகளை வடிவமைப்பதில் உலகிலேயே சிலர் தான் நிபுணத்துவம் பெற்றவர்கள். அப்படி தனித்துவமானதாக இருக்க வேண்டும் என சமந்தாவுக்காக இதனை தேர்வு செய்துள்ளார் ராஜ்.
நடுவில் ஒரு வைரம், அதனை சுற்றி பூக்களின் இதழ்களை போல 8 வைரங்கள் என பதிக்கப்பட்டு இந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமந்தா - ராஜ் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தையும் ,தெளிவான பார்வையையும் சமந்தாவின் தனித்துவத்தையும் எடுத்துவரைக்கும் வகையில் மோதிரம் இருப்பதாக வடிவமைப்பாளர்கள் பலரும் புகழ்கின்றனர்.
வழக்கமாக portrait cut diamond கள் முகலாயர் காலத்தில் நகைகளில் மினியேச்சர் ஓவியம் அல்லது அரச உருவப்படங்களை பாதுகாக்க உருவாக்கி பயன்படுத்தினார்களாம். அந்த வகையில் இந்த மோதிரம் அதன் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் தொன்மையான வரலாற்றையும் சுமந்து நிற்கிறது. பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் வடிவமைப்பது எளிதல்ல என்கின்றனர். இந்த வைர மோதிரத்தின் மதிப்பு 1.5 கோடி ரூபாய் என எக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications