மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள தாணே பகுதியில் சமோசா சிங் என்ற உணவகம் அமைந்துள்ளது. இதற்கு பல கிளைகளும் உள்ளன. இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் நிதி சிங்கும் அவரது கணவர் எஸ்வி சிங்கும் ஆவர். இருவருமே அறிவியல் பட்டதாரிகள் என்பதால் விஞ்ஞானியாக பணியாற்றினர்.
ஆனால் இவர்களுள் நிதி சிங்குக்கு இந்தியாவில் பாப்புலராக இருக்கும் ஸ்ட்ரீட் புட்டான சமோசாவை ஒரு மதிப்பான பட்சணமாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனால் தங்களது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு உணவகம் ஒன்றை தொடங்கினர்.

அங்கு சுடச்சுட மொறுமொறுவென்ற சமோசாதான் ஸ்பெஷல் ஐட்டம்.
தொடக்கத்தில் மந்தமாக இருந்தாலும் இப்போது சமோசா விற்பனை அடித்து தூள் கிளப்புகிறது. நிதி சிங் நினைத்தபடியே ஆரோக்கியமான சுகாதாரமான சமோசாக்களை தயாரித்து படு ஜோராக விற்று வருகிறார்.
சிங் என்ற பட்டப்பெயருடன் நம் நாட்டில் 36 மில்லியன் பேர் வசிக்கின்றனர். அதுவே ஒரு உணவுப் பொருளுக்கு சூட்டப்பட்டால் அதற்கு எவ்வளவு பெருமை கிடைக்கும். இதுதான் நிதி சிங்கின் ஐடியா. எனவே சமோசாவுடன் சிங்கை இணைத்து சமோசா சிங் என்று தனது உணவகத்துக்கு பெயர் சூட்டினார்.
நாட்டில் கொரானா நோய் தாக்குதலின்போது மக்கள் வெளியே நடமாட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தது. இந்த நேரத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று சமோசாக்களை சமோசா சிங் டெலிவரி செய்தது.
சுடச்சுட வந்த சமோசாவின் சுவை மக்களுக்குப் பிடித்துவிட ஆர்டர்கள் மளமளவென பெருகிவிட்டது.
இன்றைக்கு மல்டி மில்லியன் கம்பெனியாக சமோசா சிங் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இந்த சாதனை பற்றி நிதி சிங்கும் அவரது கணவரும் கூறுகையில், வானவில்லை ரசிக்க வேண்டுமென்றால் மழையில் நனையாவிட்டால் எப்படி? என்று நகைச்சுவையுடன் கேட்கின்றனர்.
கைநிறைய சம்பளம் தந்த வேலையை விட்டுவிட்டு இருவரும் உணவகத்தை ஆரம்பித்தோம். கொரோனா காலத்தொடக்கத்தில் விற்பனையே இல்லாமல் ஜீரோ நிலைக்கு நிதிநிலைமை வந்துவிட்டது. இருப்பினும் விடாப்பிடியாக ஆன்லைன் ஆர்டர்களைப் பெற்று மெல்ல மெல்ல வியாபாரத்தை சூடு பிடிக்க வைத்தோம் என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சமோசா சிங் நிறுவனத்தில் இப்போது 180 பேர் வேலை பார்க்கின்றனர். நாளொன்றுக்கு 8 கோடி சமோசா விற்பனையாகிறது. இந்த நிலையில் சமோசா சிங் பிராண்டை பான் இந்தியா அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும். அடுத்த கட்டம் வெளிநாடுகளுக்கு என்று தம்ஸ்அப் சொல்கின்றனர் இந்த சிங் தம்பதியினர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications