என்னது 1.10 கோடி ரூபாய் சம்பளமா.. சம்ப்ரீத்தி-க்கு அடித்தது ஜாக்பாட்.. கூகுள்-ன் இன்ப அதிர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஐஐடி கல்லூரிகள் உட்பட அனைத்து பெரிய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ துவங்கியுள்ள நிலையில் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக மாணவர்களைத் தேர்வு செய்து வருகின்றன.

 

பொதுவாகவே ஐஐடி கல்லூரி மாணவர்களுக்கு டெக் நிறுவனங்கள் அதிகப்படியான சம்பளத்தை வாரி வழங்கி வருகிறது.

831% வளர்ச்சி.. இந்தியா, சீனா, ஐரோப்பாவில் கொடிகட்டி பறக்கும் ரியல்மி.. இது வேற லெவல்..! 831% வளர்ச்சி.. இந்தியா, சீனா, ஐரோப்பாவில் கொடிகட்டி பறக்கும் ரியல்மி.. இது வேற லெவல்..!

 உபர் நிறுவனம்

உபர் நிறுவனம்

கடந்த வாரம் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான உபர் நிறுவனத்தைத் தொடர்ந்து தற்போது கூகுள் 1.10 கோடி ரூபாய் சம்பளத்துடன் பீகார் பெண்ணுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.

 ஐஐடி கல்லூரி

ஐஐடி கல்லூரி

இரண்டு வருடம் லாக்டவுன் காரணமாக ஐஐடி கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ மிகவும் மந்தமாக இருந்த நிலையில், இந்த வருடம் உச்சத்தைத் தொட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஐஐடி புவனேஸ்வர் கல்லூரியை சேர்ந்த மாணவருக்கு உபர் நிறுவனம் சுமார் 2 கோடி ரூபாய், அதாவது 2,74,250 டாலர் சம்பளத்தில் பணி நியமன கடிதத்தைக் கொடுத்தது.

 சம்ப்ரீத்தி யாதவ்
 

சம்ப்ரீத்தி யாதவ்

இதைத் தொடர்ந்து தற்போது சம்ப்ரீத்தி யாதவ் என்ற பெண்ணுக்கு கூகுள் நிறுவனம் சுமார் 1.10 கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலையைக் கொடுத்துள்ளது. சம்ப்ரீத்தி யாதவ் 2014ல் நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA மதிப்பெண் உடன் பள்ளிக் கல்வியை முடித்தார்.

 டெல்லி டெக்னாலஜி பல்கலைக்கழகம்

டெல்லி டெக்னாலஜி பல்கலைக்கழகம்

2 வகுப்பு தேர்வுக்குப் பின்பு 2016ல் JEE-Mains தேர்வு எழுதி வெற்றி பெற்ற நிலையில் டெல்லி டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை மே 2021ல் முடித்தார். வழக்கம் போல் படிப்பை முடித்த உடனேயே பணியைப் பெற்ற சம்ப்ரீத்தி யாதவ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்து தற்போது வருடம் 44 லட்சம் ரூபாயில் பணியாற்றி வருகிறார்.

 பாட்னா

பாட்னா

இந்நிலையில் படிப்பை முடித்து ஒரு வருடத்திற்குப் பின்பு சம்ப்ரீத்தி யாதவ்-க்கு கூகுள் நிறுவனத்தில் 1.10 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. பாட்னாவின் நேரு நகரில் வசிக்கும் வங்கி அதிகாரி ராமசங்கர் யாதவ் மற்றும் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குநரான ஷஷி பிரபா ஆகியோருக்குப் பிறந்தவர் தான் சம்ப்ரீத்தி யாதவ்.

 மைக்ரோசாப்ட் நிறுவனம்

மைக்ரோசாப்ட் நிறுவனம்

இவர் ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் கூகுள் உடன் அடோப், பிளிப்கார்ட் மற்றும் பிற முன்னணி டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களிடமிருந்து வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளார். கூகுள் ஆன்லைனில் பல்வேறு நிலைகளில் சுமார் 9 சுற்றுகளில் நேர்காணல்களை நடத்தியுள்ளதாகச் சம்ப்ரீத்தி யாதவ் தெரிவித்துள்ளார்.

 ஐஐடி புவனேஸ்வர்

ஐஐடி புவனேஸ்வர்

கடந்த வருடம் ஐஐடி புவனேஸ்வர் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் சுமார் 2 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தில் வேலைவாய்ப்பைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sampreeti Yadav, a Bihar girl bagged a job at Google with Rs 1.10 crore package

Sampreeti Yadav, a Bihar girl bagged a job at Google with Rs 1.10 crore package 1.10 கோடி ரூபாய் சம்பளம்.. கூகுள் நிறுவனத்தில் வேலை வாங்கிய பீகார் பெண்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X