பிளிப்கார்ட்டின் "பிக் பில்லியன் டேஸ்" மற்றும் அமேசானின் "தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்" போன்ற சிறப்பு விற்பனையின் போது அதிக தள்ளுபடி மற்றும் சிறந்த மார்க்கெட்டிங்கின் மூலம் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 6 வரையிலான காலகட்டத்தில் சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகிய ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் மிகப்பெரிய லாபம் ஈட்டியுள்ளன. சந்தை ஆய்வாளர்களின் மதிப்பீடுகளின்படி, 11 நாட்கள் நீடித்த 2024 பண்டிகை சீசன் விற்பனையின் ஆரம்ப கட்டத்தில், ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஒட்டுமொத்தமாக $3 பில்லியன் (300 கோடி) சாதனங்களை விற்றுள்ளன.
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் மற்றும் டெக் இன்சைட்ஸின் கூற்றுப்படி, பண்டிகை விற்பனையின் முதல் பாதியில் பிக் பில்லியன் டேஸ் மற்றும் தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அதிக சலுகைகளுடன் சாம்சங் முன்னிலை வகித்தது.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான டெக்இன்சைட்ஸ்ஸின் கருத்துப் படி கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில், சாம்சங் கடந்த ஆண்டை விட விற்பனையில் 17 சதவிகித வளர்ச்சியைக் கண்டது.
Xiaomi மற்றும் Vivo போன்ற சீன பிராண்டுகளின் நுழைவு மற்றும் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து வந்த கடும் போட்டியின் மத்தியில் அதன் சந்தைப் பங்கை தக்கவைக்க போராடிக்கொண்டிருந்த சாம்சங்கிற்கு இந்த பண்டிகை விற்பனை சிறிது நிம்மதி அளித்தது. ஐபோன் 15 மாடல்கள் 11 நாட்கள் விற்பனையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகி, கடந்த ஆண்டை விட 44 சதவீத வளர்ச்சியைக் கண்டது.
அதிக வாடிக்கையாளர்கள் பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்தனர். முதல் முறையாக ரூ.70,000 மற்றும் அதற்கு மேற்பட்ட அல்ட்ரா-பிரீமியம் பிரிவில் ஒரு மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தனர். இந்த விலைப் பிரிவில் ஆப்பிள் ஆதிக்கம் செலுத்தியது.
டெக் ஆர்க்கின் கூற்றுப்படி, சாம்சங், ஆப்பிள், நார்சோ, ரெட்மி, OnePlus மற்றும் iQoo ஆகிய பிராண்டுகளும் இந்த பண்டிகைக் காலத்தில் சிறப்பாக செயல்பட்டன. கடந்த இரண்டு வருடங்களில் 7-8 நாட்களை ஒப்பிடும் போது, 2024 இல் பண்டிகை காலத்தின் முதல் அலை 11 நாட்கள் நீடித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பண்டிகை கால விற்பனையின் இரண்டாவது அலை வரும் நாட்களில் தொடங்கும். மீண்டும் ஆன்லைன் சேனல் ஆதிக்கம் செலுத்தும், அதைத் தொடர்ந்து மூன்றாவது அலை விற்பனை, பெரும்பாலும் ஆஃப்லைன் சேனலில் இருக்கும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications