இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரி விதிக்கப்படும் என அறிவித்திருப்பதால் சாம்சங் உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் சீனாவில் இருந்து தங்களுடைய உற்பத்தியை இந்தியாவிற்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எக்னாமிக் டைம்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் சாம்சங் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தியை சீனாவிலிருந்து வேறு நாட்டிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளனவாம். அந்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவே இருப்பதாக தெரிவித்துள்ளது. மார்ச் 4ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரி விதிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த வரி உயர்வு மின்னணு சாதன பொருட்கள் பொருட்களான ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப்கள் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றின் விலையை மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளன.
ஏற்கனவே 2020 ஆம் ஆண்டிலிருந்து சீனாவில் செயல்பட்டு வரும் தங்களுடைய ஆலைகளை சாம்சங் படிப்படியாக மூடி வருகிறது. தற்போது சீன பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட்டிருப்பதால் சாம்சங் நிறுவனம் தன்னுடைய கவனத்தை இந்தியா மீது திருப்ப இருப்பதாகவும் இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் ஹை என்ட் மாடல் போன்கள் உற்பத்தி செய்யப்படுவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல அமெரிக்க சந்தையில் கணிசமான பங்கினை வைத்திருக்கக்கூடிய உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இடம் மாற்றுவதற்கு திட்டமிட்டு இருக்கின்றன என சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசு மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றை பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு இந்த நிறுவனங்கள் முன் வந்திருப்பதாக தெரிவிக்கிறது.
குறிப்பாக சாம்சங் நிறுவனத்தை பொருத்தவரை அதன் ஒரிஜினல் டிசைன் மேனுஃபேக்சரஸ் பெரும்பாலும் சீனாவில் தான் இருக்கின்றன. இவை தான் ஸ்மார்ட் போன்களின் அடிப்படை. எனவே ஸ்மார்ட் போன் உற்பத்திக்கு சாம்சங் நிறுவனம் சீனாவையே பெருமளவு சார்ந்து இருக்கிறது. இந்நிலையில் அதையே இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்திற்கு போனின் அடிப்படை வடிவமைப்பை உருவாக்கி வரும் மூன்று நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் தங்களின் ஆலைகளை நிறுவியுள்ளன என்பதால் இனிவரும் நாட்களில் சாம்சங் போன்களின் அடிப்படை வடிவமைப்புகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications