உலகிலேயே மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக விளங்கும் இந்தியாவின் வர்த்தகச் சந்தையைப் பிடிக்க ஒவ்வொரு நாளும் போட்டி அதிகமாகிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தியாவில் இன்னும் பியூச்சர் போன்ற பயன்படுத்திக் கொண்டு இருக்கும் பெரும் கூட்டம் இருக்கும் காரணத்தால் இந்தியா மிகவும் முக்கியமான சந்தையாக விளங்குகிறது.
இதேபோல் இந்தியாவில் 5ஜி சேவை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், 5ஜி போன்களுக்குமான சந்தையும் இந்தியாவில் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தான் இந்திய சந்தையைப் பிடிப்பதில் சீன நிறுவனமான சியோமி, தென் கொரியா நிறுவனமான சாம்சங் மத்தியில் பெரும் போட்டி போட்டி உருவாகியுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தை
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல வருடங்களாகச் சியோமி முதல் இடத்தில் இருப்பது மட்டும் அல்லாமல் 2வது இடத்தில் இருக்கும் நிறுவனத்திற்கும் சியோமிக்கும் கடுமையான போட்டி இருக்கும் காரணத்தால் சியோமி அசைக்க முடியாத நிலையில் இருந்தது.
சாம்சங்
இந்த நிலையில் தான் தென் கொரிய நிறுவனமான சாம்சங் பல வருட முயற்சியால் ஆன்லைன் விற்பனை அதிகரித்தும், கடன் திட்டங்கள் இந்திய மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பை கொடுத்த நிலையில் சியோமி-ஐ பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தைப் பிடிக்க உள்ளது.
2023 ஆம் ஆண்டு
மேலும் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொபைல் ஷிப்மென்ட் பெரிய அளவில் சரியும் எனக் கணிக்கப்படும் வேளையில் இந்திய மக்கள் 2023 முதல் பட்ஜெட் போன்களைக் காட்டிலும் அதிக விலை கொண்ட போன்களை அதிகளவில் வாங்குவார்கள் எனக் கணிக்கப்படுகிறது.
சராசரி விலை
இதன் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனின் சராசரி விலை 250 டாலராக இருக்கும் என்றும், இது கடந்த ஆண்டை காட்டிலும் 4 சதவீதம் அதிகமாகும்.
சாம்சங் - சியோமி
மேலும் 2023 ஆம் ஆண்டின் 2வது காலாண்டுக்குள் சாம்சங் இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் 23-24 சதவீத சந்தையைக் கொண்டும், சியோமி 19-20 சதவீத சந்தை உடன் 2வது இடத்திற்குத் தள்ளப்படும் என Techarc நிறுவனத்தின் கணிப்புகள் கூறுகிறது.
சியோமி
இதேவேளையில் இன்று சியோமி நிறுவனத்தின் இந்திய சந்தையின் தலைமை வர்த்தக அதிகாரி ரகு ரெட்டி தனது பணியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். சியோமி நிறுவனத்தின் தயாரிப்புகளின் ஆன்லைன், ஆப்லைன் விற்பனை பிரிவை நிர்வாகம் செய்து வந்தார்.
ரகு ரெட்டி ராஜினாமா
ரகு ரெட்டி சியோமி நிறுவனத்தில் பல பொறுப்புகளில் சுமார் 6 வருடம் பணியாற்றிய நிலையில் 2020ல் சியோமி இந்தியாவின் chief business officer ஆக நியமிக்கப்பட்டார். ரகு ரெட்டி சியோமி நிறுவனத்தில் தனது பணியைத் துவங்குவதற்கு முன்பு விப்ரோ நிறுவனத்தின் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆகவும், E&Y நிறுவனத்தில் சீனியர் கன்சல்டன்டென்ட் ஆகவும், ஸ்னாப்டீல் நிறுவனத்தின் உயர் தலைவராகவும் பணியாற்றினார்.
Xiaomi இந்தியா
Xiaomi இந்தியா நிறுவனத்தின் வர்த்தகம், நிதி பரிமாற்றங்கள் மத்திய அரசால் கண்காணிக்கப்பட்டு வருவது மட்டும் அல்லாமல் பல மோசடிகள் நடந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த முக்கியமான நிலையில் தான் சியோமி chief business officer தனது பணியை ராஜினாமா செய்ய உள்ளார்.
5,500 கோடி ரூபாய் முடக்கம்
சியோமி நிறுவனத்திற்குச் சொந்தமான 5,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வங்கி சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குனரகம் ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கு
ஆனால் சியோமி நிறுவனம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அமலாக்க இயக்குனரகத்தின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இக்குற்றச்சாட்டில் இருந்தும் வெளியேற வழக்கு தொடுத்துள்ளது, இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications