எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றுதான் சாம்சங். இந்நிறுவனம் சவுத் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமாகும். பலருக்கும் தெரிந்த முன்னணி பிராண்டாக சாம்சங் இருந்து வருகிறது. வியட்நாமில் உற்பத்தி ஆலை அமைத்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சாம்சங் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
சமீபத்தில் டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரி முறையைக் கொண்டு வந்தார். அதாவது எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்கிறதோ? அந்தந்த நாடுகள் எப்படி வரிவிதிக்கிறது என்பதைப் பொறுத்து அமெரிக்காவும் வரிவிதிக்கும். இந்நிலையில் வியட்நாம் மீது அமெரிக்கா அதிக வரி விதித்தது. இதனால் தங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் சிலவற்றை இந்தியாவிற்கு மாற்றுவது குறித்து சாம்சங் நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, தங்கள் உற்பத்தி ஆலையை மாற்றுவது குறித்து பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சாம்சங் மட்டுமல்லாமல் வியட்நாமில் உள்ள பிற நிறுவனங்களும் தங்களின் உற்பத்தியில் சிலவற்றை இந்தியாவிற்கு மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும், இது போன்ற விஷயங்களை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் பேரன்ட் நிறுவனமான ஆல்பாபெட், உலக அளவில் பிக்சல் ஸ்மார்ட் போன் உற்பத்தியில் முன்னணி வகுக்கிறது. இந்நிறுவனம் தனது உற்பத்தியின் ஒரு பகுதியை வியட்நாமிலிருந்து இந்தியாவிற்கு நகர்த்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவில் இயங்கி வரும் அதன் ஒப்பந்த உற்பத்தியாளர்களான டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகியோருடன் ஆல்பாபெட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த செய்தி வெளியான ஒரு நாளுக்குப் பின் சாம்சங் நிறுவனமும் தனது உற்பத்தியை மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வியட்நாம் சாம்சங் நிறுவன உற்பத்தியின் முக்கிய மையமாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் 2024-ஆம் நிதியாண்டில் மட்டும் 52 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொபைல் போன்கள் மற்றும் உதிரி பாகங்களை வியட்நாம் ஏற்றுமதி செய்துள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 9 சதவீதமாகும்.
கடந்த ஆண்டு வியட்நாமின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி 142 பில்லியன் டாலரை எட்டியது. இது 2024-ஆம் ஆண்டில் இந்தியா ஏற்றுமதி செய்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விட கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகம். ஏனெனில் இந்தியா ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு வெறும் 29.2 பில்லியன் டாலர்கள் மட்டுமே.
ஆல்பாபெட் மற்றும் சாம்சங் ஆகியவை இந்தியாவிற்கு தங்கள் உற்பத்தியை மாற்றுவதால் உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியாவும் தன்னை நிலை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 46 சதவீத வரியை அறிவித்தார். ஆனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரியை அறிவித்துள்ளார். இதனால் பல நிறுவனங்களும் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவிற்கு மாற்ற தொடங்கியுள்ளது.
இதற்காக சாம்சங் நிறுவனம் 117.09 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக, தமிழக தொழில் துறை அமைச்சரான டிஆர்பி ராஜா தனது X பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள இந்த ஆலையில் சமீபத்தில் ஊதிய உயர்வு வழங்கப்படாததை எதிர்த்து, ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிறுவனம் ஒப்புக்கொண்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் கூடுதல் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த முதலீட்டின் மூலம் சாம்சங் ஆலையில் கூடுதலாக 100 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் டிஆர்பி ராஜா தனது X பதிவில் பகிர்ந்துள்ளார்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications