உலகில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்கும் முன்னணி பிராண்ட் என்ற பட்டத்தைப் பல வருடங்களாக வைத்திருந்த சாம்சங்-ஐ ஓரம்கட்டிவிட்டு, ஆப்பிள் அப்பட்டத்தைப் பெற்றது. இந்த நிலையில் அடுத்த வருடமே இந்தப் பட்டத்தைத் திரும்பவும் பெற வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை வைத்திருக்கும் சாம்சங், வாடிக்கையாளர்களைக் கவர்வதைத் தாண்டி கைக்கு எட்டும் தூரத்தில் சாம்சங் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற முக்கியமான இலக்கை கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சாம்சங் இந்தியாவில் அதன் சமீபத்திய வெளியீடான கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அல்ட்ரா-ஸ்விஃப்ட் 10 நிமிட டெலிவரி சேவையை அறிமுகப்படுத்த குருகிராம்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விரைவு-வணிகத் தளமான பிளிங்கிட் உடன் இணைந்துள்ளது.
ஜனவரி 17 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மூன்று நாட்களுக்குள் 2,50,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றது. இதன் மூலம் மக்கள் மத்தியில் இதற்கு அதிகப்படியான தேவை இருக்கும் காரணத்தால் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்திச் செய்வதை இந்தப் புதிய டெலிவரி கூட்டணியை அமைத்துள்ளது.
சாம்சங் மற்றும் பிளிங்கிட் ஆகியவை பயனர்களுக்கு மின்னல் வேக டெலிவரி அனுபவத்தை வழங்க உறுதி கொண்டுள்ளது. இதன் மூலம் மக்கள் ஆர்டர் செய்த தருணத்திலிருந்து Galaxy S24, S24 Plus மற்றும் S24 Ultra ஆகிய போன்களை 10 நிமிடங்களுக்குள் டெலிவரி இலக்கை அடைவதை உறுதி செய்கிறது.
விரைவு-வணிகத் தளம் எனக் கூறப்படும் குவிக் காமர்ஸ் தளங்களில் சமீபகாலமாக உணவு, மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களைத் தாண்டி எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் அதிகளவில் விற்கப்படுகிறது. இதன் நீட்சியாகத் தற்போது சாம்சங் Galaxy S24, S24 Plus மற்றும் S24 Ultra மாடல் போன்களைப் பிளிங்கிட் வாயிலாக ஹோம் டெலிவரி செய்யப்பட உள்ளது.
இந்தக் குவிக் டெலிவரி சேவை டெல்லி-என்சிஆர், பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் அளிக்கப்படுகிறது. இதைவிட முக்கியமாக ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு இருந்தால் இன்ஸ்டென்ட் தள்ளுபடியாக 5000 ரூபாய் வரையிலான ஆஃபர் அளிக்கப்படுகிறது.
இதற்கு முன்பு 2022ல் ஐபோன்14-ஐ Blinkit நிறுவனம் ஆப்பிள் ரீசெல்லர் உடன் இணைந்து குவிக் டெலிவரி சேவை மூலம் விற்பனை செய்தது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications