சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அதன் அமெரிக்காவின் செமிகண்டக்டர் துணை நிறுவனத்தில் 3% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
சாம்சங் DSA அமெரிக்காவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் இந்த பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே சாம்சங் DSA நிலவி வரும் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், பணி நீக்கம் குறித்து கூறியதாகவும் பிசினஸ் கொரியா தெரிவித்துள்ளது.
டெக் ஊழியர்கள் பணி நீக்கம்
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே பல ஆயிரம் ஊழியர்கள் டெக் துறையில் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இந்த போக்கு இனியும் தொடரலாம் என தெரிகிறது. இதற்கிடையில் தான் சாம்சங் DSA-வும் பணி நீக்க நடவடிக்கையினை கையில் எடுத்துள்ளது. இதில் 30 ஊழியர்கள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏன் பணி நீக்கம்?
சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றன. நிலவி வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் தேவையானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் செமிகண்டக்டர் தேவையும் குறைய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாகவே சாம்சங் DSA- வும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.
லாபம் சரிவு
எப்படியிருப்பினும் இந்த நிறுவனம் கடந்த 4வது காலாண்டில் 204 மில்லியன் டாலர்கள் செயல்பாட்டு லாபத்தினை செமிகண்டக்டர் பிரிவில் கண்டுள்ளது. எனினும் இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 96.9% சரிவினைக் கண்டுள்ளது. இந்த போக்கு நடப்பு காலாண்டிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இன்டெல் பணி நீக்கம்
எப்படியிருப்பினும் சாம்சங் என்பது செமிகண்டக்டர் என்பதை மட்டுமே உற்பத்தி செய்யவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ள்து.
இதே சிப் உற்பத்தியாளரான இன்டெல் 17 பில்லியன் டாலர் விற்பனையை செய்திருந்தாலும், இந்த நிறுவனம் 700 மில்லியன் டாலர் செயல்பாட்டு இழப்பினை 4வது காலாண்டில் கண்டுள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் மோசமான ஒரு செயல்பாடாக உள்ளது. இதனை சரிசெய்யவே நிறுவனம் ஆயிரக் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications