தென்கொரியா: உலகளவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கு அடுத்தபடியாக மக்கள் விரும்பி வாங்கும் மின்னணு சாதன நிறுவனமாக சாம்சங் இருக்கிறது. சாம்சங் நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த அதன் இணை தலைமை செயல் அதிகாரி Han Jong-Hee காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரியாக 63 வயதான ஹான் ஜாங் பொறுப்பு வகித்து வந்தார். சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கன்சியூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் பிரிவுகளுக்கு இவர் தலைமை தாங்கி வந்தார். இந்த நிலையில் ஹான் ஜாங் திடீரென மரணமடைந்திருப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1988 ஆம் ஆண்டு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர் ஹான் ஜாங். அவர் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நுழைவு நிலையில் ஊழியராக பணிக்கு சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவின் தலைவராகவும், 2021 முதல் 2013 வரை விசுவல் டிஸ்ப்ளே பிரிவின் தலைவராகவும் பணியாற்றி இருந்தார்.
2021 ஆம் ஆண்டு சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவராக பொறுப்பேற்றார். அப்போது சாம்சங் நிறுவனத்தின் டிவி தொழிலை மார்க்கெட்டிங் செய்யும் பொறுப்பு இவருக்கு வந்தது. இதனை அடுத்து அதில் சிறப்பாக செயல்பட்டதால் இவருக்கு சாம்சங் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு முதல் இந்த பொறுப்பை வகித்து வந்தார்.
அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹானை பொறுத்தவரை ஆண்டுதோறும் இவருக்கு சாம்சங் நிறுவனம் 41 கோடி ரூபாயை ஊதியமாக வழங்கி வந்திருக்கிறது. வரும் புதன்கிழமை அன்று சாம்சங் நிறுவனம் தன்னுடைய புதிய வீட்டு உபயோக பொருட்களை அறிமுகம் செய்ய இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஹான் தான் தலைமை தாங்குவதாக இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்திருக்கிறார். இவரை தொடர்ந்து அந்த பதவி யாருக்கு கிடைக்கும் என்ற விவரங்களை சாம்சங் நிறுவனம் வெளியிடவில்லை.
சாம்சங் நிறுவனம் சமகால தேவைக்கான பல்வேறு சாதனங்களை உற்பத்தி செய்ய காரணமாக இருந்தவர் தான் ஹான். கிட்டதட்ட சாம்சங் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்துள்ளார். சாதாரண ஊழியராக பணியை தொடங்கி சாம்சங் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி என்ற பொறுப்பு வரை உயர்ந்தவர் . செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சாம்சங் கால் பதிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர்தான்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications